பொது செய்தி

தமிழ்நாடு

வரலட்சுமி நோன்பு கோலாகலம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வரலட்சுமி நோன்பான நேற்று, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் இல்லாமல் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால், பெண்கள் தங்கள் வீடுகளிலேயே நோன்பு நோற்று, அம்மனை வழிபட்டனர். வரலட்சுமி நோன்பு அல்லது மஹாலட்சுமி விரதம் என்பது, செல்வங்களுக்கு அதிபதியான ஸ்ரீமஹாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம். ஒவ்வொரு ஆண்டும், ஆடி அல்லது ஆவணி
 வரலட்சுமி நோன்பு கோலாகலம்

வரலட்சுமி நோன்பான நேற்று, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் இல்லாமல் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால், பெண்கள் தங்கள் வீடுகளிலேயே நோன்பு நோற்று, அம்மனை வழிபட்டனர்.

வரலட்சுமி நோன்பு அல்லது மஹாலட்சுமி விரதம் என்பது, செல்வங்களுக்கு அதிபதியான ஸ்ரீமஹாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம். ஒவ்வொரு ஆண்டும், ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமங்கலிப் பெண்கள், தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பம் செல்வ, செழிப்போடு இருக்கவும், நல்ல கணவன் அமைய வேண்டி கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்வர். வீடுகளில் கலசம் வைத்து, அம்மன் முகத்தை வரைந்து, அதற்கு அலங்காரம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பல வகை பலகாரங்கள் செய்து நிவேதனம் செய்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நாளில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். பெரும் திரளான பெண்கள் கோவில் வழிபாட்டில் பங்கேற்பர். இந்த ஆண்டு, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்கள் தங்கள் வீடுகளிலேயே நோன்பு இருந்து அம்மனை வழிபட்டனர்.

பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில் வரலட்சுமி விரதத்தினை முன்னிட்டு, பக்தர்கள் இன்றி நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 9:30 மணிக்கு குபேர, சுத்த ஹோமங்கள் நடத்தப்பட்டன.மதியம் 12:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும், மங்கலப் பொருட்கள் வைத்து பூஜையும் நடந்தது.

மாலை 4:30 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு சாற்று முறை, அதை தொடர்ந்து சயன பூஜையுடையுடன் விழா நிறைவடைந்தது. கோடம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு 108 புடவை அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. அதே போல், காளிகாம்பாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது.

- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X