பொது செய்தி

தமிழ்நாடு

குரோம்பேட்டையில் போத்தீஸ் திறப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை குரோம்பேட்டையில், போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால், ஒரே வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது.பிரபல நிறுவனமான போத்தீஸ், 17வது கிளையை, சென்னை குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று, துவக்கியுள்ளது. அங்கு ஒரே வளாகத்தில், போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் செயல்படுகின்றன.குரோம்பேட்டை போத்தீஸில் உள்ள பட்டு பிரிவு, சென்னையிலேயே மிக பெரியது. பாரம்பரிய

சென்னை : சென்னை குரோம்பேட்டையில், போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால், ஒரே வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனமான போத்தீஸ், 17வது கிளையை, சென்னை குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று, துவக்கியுள்ளது. அங்கு ஒரே வளாகத்தில், போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் செயல்படுகின்றன.குரோம்பேட்டை போத்தீஸில் உள்ள பட்டு பிரிவு, சென்னையிலேயே மிக பெரியது. பாரம்பரிய திருமண பட்டு புடவை ரகங்கள், அனைத்து விழாக்களுக்கும் ஆடைகள், பேன்சி புடவைகள், இளம் நங்கையருக்கு சுடிதார் ரகங்கள், ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கு ரெடிமேட் ஆடைகள், பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் கிடைக்கும்.

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில், தங்க நகைகளில் வியப்பூட்டும் ரகங்களும், வேறெங்கும் கிடைக்காத உண்மையான விலையில் கிடைக்கும். குரோம்பேட்டை போத்தீஸில், உயர்ரக சூப்பர் மார்க்கெட்டும் உள்ளது. அதில், வீட்டு தேவையான எலக்ட்ரானிக்ஸ், மளிகை, காய்கறிகள், பழங்கள் ஆகிய அனைத்து பொருட்களும் மிக குறைந்த விலையில் கிடைக்கும். இதுதவிர, புட் கோர்ட்டும் உள்ளது.

இதுகுறித்து, போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:அதிவேகமாக வளர்ந்து வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போத்தீஸ், அதன் வாடிக்கையாளர்களுக்கு, 'வாடிக்கையாளர் முக்கியத்துவம்' அணுகுமுறையை கொண்டு, அவர்களின் வீட்டின் அருகிலேயே மாபெரும் மற்றும் கண்கவர் ஷோரூமை கொண்டு வந்துள்ளது.போத்தீஸ் பிறப்பிடமான திருநெல்வேலியில், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் வெற்றிகரமான திறப்பு விழாவிற்கு பின், சென்னையில், மிக பெரிய தங்க நகை ஷோரூமை கொண்டு வந்துள்ளது. இந்த வளாகத்தில், ஜவுளி மற்றும் ஜூவல்லரி இரண்டும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X