பொது செய்தி

தமிழ்நாடு

சொர்க்கத்தில் அல்ல... திருமண நிச்சயம்!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று, கோவில் வாசலில் திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டன.கொரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களை திறக்க அரசு தடைவிதித்துள்ளது. நேற்று ஆவணி மாத முதல் முகூர்த்தம். நகரின் மைய பகுதியில் அமைந்திருப்பதால், திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவிலில் முகூர்த்த நாளில், பல்வேறு
 சொர்க்கத்தில் அல்ல...  திருமண நிச்சயம்!

திருப்பூர்:ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று, கோவில் வாசலில் திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டன.கொரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களை திறக்க அரசு தடைவிதித்துள்ளது. நேற்று ஆவணி மாத முதல் முகூர்த்தம். நகரின் மைய பகுதியில் அமைந்திருப்பதால், திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவிலில் முகூர்த்த நாளில், பல்வேறு பகுதியில் இரு வீட்டார் உறவுகளுடன் வருவதும், திருமணம் நிச்சயிப்பதும் வழக்கம்.அரசின் உத்தரவை ஏற்று நேற்று இவ்விரு கோவில்களும் வழிபாட்டுக்கு திறக்கப்படவில்லை. கோவில்கள் திறக்கப்படாத சூழலில் கோவில் வாசலில் கூடைகளில் உப்பு, சர்க்க்ரை மற்றும் பூஜை பொருட்கள் வைத்து சாமி தரிசனம் செய்து, இருவீட்டாரும், கூடைகளை மாற்றி திருமணத்தை உறுதி செய்து கொண்டனர்.இதில் பங்கேற்ற சிலர் கூறுகையில், 'கொரோனா பரவலை தடுக்க திருமணங்கள் எளிமையாக வீடுகளில் நடத்தப்பட்டாலும், நம் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டுக்கு உப்பு, சர்க்கரை மாற்றி திருமணத்தை உறுதி செய்வதும், அதே நாளில் ஐவுளி, நகை எடுப்பது வழக்கம். அதன்படி, முகூர்த்த நாளான நேற்று திருமணம் உறுதி செய்து கொண்டோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X