பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையின் சுவாசத்தை மாற்றும் தன்னார்வலர்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
நகரமயமாக்கலால் இழந்த இயற்கை செல்வமான பசுமை பரப்பை மீட்டெடுக்க, பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சப்தமின்றி மரம் நடும் பணிகளை செய்து வருகின்றனர். வழி மாறும் இளைஞர்களுக்கு, இந்த பணிகளில் ஈடுபடும் ஆர்வத்தை, இந்த தன்னார்வலர்கள் துாண்டி விடுகின்றனர். இதன் பயனாக, சென்னை மற்றும் புறநகரின் பசுமை பரப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.இளைஞர்களால் மட்டுமே

நகரமயமாக்கலால் இழந்த இயற்கை செல்வமான பசுமை பரப்பை மீட்டெடுக்க, பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சப்தமின்றி மரம் நடும் பணிகளை செய்து வருகின்றனர். வழி மாறும் இளைஞர்களுக்கு, இந்த பணிகளில் ஈடுபடும் ஆர்வத்தை, இந்த தன்னார்வலர்கள் துாண்டி விடுகின்றனர். இதன் பயனாக, சென்னை மற்றும் புறநகரின் பசுமை பரப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.


இளைஞர்களால் மட்டுமே முடியும்!


எங்கள் அமைப்பினர் 13 ஆண்டு களாக மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறோம். எங்கள் அமைப்பில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இதற்கு, ஆர்வம், வயது ஆகிய இரண்டும் முக்கிய காரணம். பசுமை புரட்சியை இளைஞர்களால் மட்டுமே முன்னெடுத்து செல்ல முடியும். அவர்களால் மட்டுமே, அனைத்து இடங்களுக்கும் சென்று, விழிப்புணர்வு, மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட முடியும். மரக்கன்றுகள் தேவைப்படுவோர் எங்களை அணுகினால் இலவசமாக வழங்க தயாராக உள்ளோம்.

மெரினாவில் 3,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். 'பசுமை சென்னை' என்ற கருப்பொருளை மையமாக வைத்து, மரக்கன்றுகளை நடுகிறோம். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் நடும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் 7,000 மரக்கன்றுகளை நட உள்ளோம். இதற்காக சென்னை முழுதும் உள்ள அரசு பள்ளிகள், பூங்காக்களில் மரம் நட அனுமதி கோரப்பட்டுள்ளது.

லயன் அசோக்குமார் சபாட், 42,தலைவர், பல்லாவரம் லயன்ஸ் கிளப்.1.25 லட்சம் மரங்கள் சென்னையில், எங்கள் அமைப்பு மட்டும் 16 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளது. இதர தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, இதுவரை 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். காலி இடங்கள், நீர்நிலை கரையில் 2.25 லட்சம் பனை விதைகளை விதைத்துள்ளோம்.

வீடு வீடாக சென்று மரக்கன்று நடுவது குறித்து பேசுகிறோம். அவர்கள் விரும்பும் மரக்கன்று வாங்கி, நட்டு கொடுத்து, எப்படி பராமரிக்க வேண்டும் என, சொல்லிக் கொடுக்கிறோம். எங்கள் அமைப்பில் உள்ள 18 பேர் குழு இப்பணியில் ஈடுபடுகிறது. இப்போதும், எங்களிடம் மரக்கன்றுகள் உள்ளன. காலி இடம் இருப்பதாக யாராவது கூறினால், அங்கு நட தயாராக உள்ளோம்.

ஒவ்வொரு வீடு முன்பும் மரம் நின்றால், சென்னையின் பசுமை அதிகரிக்கும். பள்ளி மாணவ - மாணவியர், இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

ஆர்.நாராயணன், 41, நிறுவனர், பசுமை பூமி அறக்கட்டளை.இளைஞர்களிடம் விழிப்புணர்வு!மரக்கன்றுகளை நடுதல் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், சாலை பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு இடத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, அதை பார்க்கும் இளைஞர்கள் எங்களுடன் இணைந்து சேவை செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர். நாங்களும், அவர்களை நல்வழிப்படுத்த இணைத்துக் கொள்கிறோம். சமீபகாலமாக, பசுமை புரட்சி குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

ப.மணிவண்ணன், 43,நிறுவனர், அறம் பவுண்டேஷன்.பள்ளியிலும் விழிப்புணர்வு!வேளச்சேரி - பெருங்குடி ரயில் நிலைய சாலை, வி.ஜி.பி., செல்வா நகர், விஜய நகர், அன்னை இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் 1,200 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கிறோம். ரயில்வே முழு ஒத்துழைப்பு வழங்கியது. தண்ணீர் ஊற்ற, இரண்டு இடங்களில் தொட்டி கட்டி வருகிறோம். வேளச்சேரி முழுதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், எங்கள் செயல் திட்டம் உள்ளது.

தன்னார்வலர்கள், எக்ஸ்னோரா, ரோட்டரி கிளப், நலச்சங்கங்கள் கொண்ட அமைப்பாக செயல்படுகிறோம். இளைஞர்கள் ஆர்வமாக வருகின்றனர். பள்ளி திறந்த பின், அங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.எஸ்.குமாரராஜா, 61, தலைவர், பசுமை வேளச்சேரி அறக்கட்டளைகைகொடுக்கும் கிராமத்து இளைஞர்கள்!எங்களின் 'விடியல்' அமைப்பை 2008ல் துவக்கினோம். அமைப்பின் மூலம் இதுவரை 35 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். இதில் 80 சதவீதம் மரங்கள் உயிர்ப்புடன் உள்ளன.

ஒரு பகுதியில் 100 மரக்கன்றுகள் வேண்டும் எனக் கேட்டால், நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். யாரிடமும் நன்கொடை வாங்குவதில்லை. சொந்த பணத்திலேயே மரக்கன்றுகளை நடுகிறோம். இதற்காக, ஒரு குழு வைத்துள்ளோம். விடியல் அமைப்பில் இளைஞர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் முழுமையாக வருவதில்லை.சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற முக்கியமான நாட்களில் அமைப்புடன் இணைந்து, மரம் நடுதலில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மற்ற நேரங்களில் அவர்களின் பணியை கவனிக்கின்றனர். அதனால், கிராமப்புற இளைஞர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். அதற்காக, சில இளைஞர்களை இணைத்துள்ளோம். ஒரு பகுதியில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றால், கிராமப்புற இளைஞர்களை அழைப்போம்.

அவர்கள், சரியான அளவில் பள்ளம் தோண்டி, முறையாக மரக்கன்றுகளை நடுவர். இப்படி செய்தால், பசுமை புரட்சியும் பெருகும்; கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்க முடிகிறது.எம்.ஸ்ரீதர், 54.செயலர், விடியல் அமைப்பு,குரோம்பேட்டை.சென்னை மற்றும் புறநகரில் சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த பணிகளில் ஈடுபடும் ஆர்வலரா நீங்கள்? புகைப்படத்துடன் அது குறித்த விபரங்களை, எங்களுக்கு 87544 49439 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு தெரிவியுங்கள்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X