பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள் வைக்க அழைப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களில், ஓட்டல்கள், கடைகள் நடத்துவதற்கு தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் நிறுவனம் வருவாய் அதிகரிக்க, நிலையங்களில் பயணியர் பயன்பாட்டுக்கான இடம் தவிர, மற்ற இடங்களை தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வைக்கவும், ஓட்டல்கள், கடைகள் வைப்பதற்கும் வாடகைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை -

சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களில், ஓட்டல்கள், கடைகள் நடத்துவதற்கு தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவனம் வருவாய் அதிகரிக்க, நிலையங்களில் பயணியர் பயன்பாட்டுக்கான இடம் தவிர, மற்ற இடங்களை தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வைக்கவும், ஓட்டல்கள், கடைகள் வைப்பதற்கும் வாடகைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மெட்ரோ நிலையம் இடையே, 39 நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில், விமான நிலையம், ஆலந்துார், கிண்டி, அசோக்நகர், வடபழனி, சி.எம்.பி.டி, கோயம்பேடு, திருமங்கலம் நிலையங்களில், முன் தனியாருக்கு கடைகள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கத்திற்கு பின், இந்த கடைகளில் சில கடைகள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சில கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.இதையொட்டி, மெட்ரோ நிலையங்களில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் வைப்பதற்கு மெட்ரோ நிறுவனத்தின் சார்பில், தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X