தங்கம் வென்ற திருப்பூர் மாணவர்! சதுரங்க குத்துச்சண்டையில் சாதனை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:தேசிய அளவிலான சதுரங்க குத்துச்சண்டை போட்டி(சதுரங்க குத்துச்சண்டை என்பது ஒரு சுற்றில் சதுரங்கமும், மறுசுற்றில் குத்துச்சண்டை மேற்கொள்வதாகும்) கொல்கத்தாவில் கடந்த 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடந்தது. 12 மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் இருந்து, 40 பேர் பங்கேற்றனர். போட்டியில், 54 கிலோ எடைப்பிரிவில், பி.என்.,ரோடு,

அனுப்பர்பாளையம்:தேசிய அளவிலான சதுரங்க குத்துச்சண்டை போட்டி(சதுரங்க குத்துச்சண்டை என்பது ஒரு சுற்றில் சதுரங்கமும், மறுசுற்றில் குத்துச்சண்டை மேற்கொள்வதாகும்) கொல்கத்தாவில் கடந்த 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடந்தது. 12 மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் இருந்து, 40 பேர் பங்கேற்றனர். போட்டியில், 54 கிலோ எடைப்பிரிவில், பி.என்.,ரோடு, மும்மூர்த்தி நகரை சேர்ந்த மாணவர் ஈஸ்வரமூர்த்தி, 20, முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.நேற்று திருப்பூர் திரும்பிய வீரர் ஈஸ்வரமூர்த்திக்கு ஊர் பொதுமக்கள் விளையாட்டு ஆர்வலர்கள், வரவேற்பு அளித்தனர். 'தற்போது, தங்கம் வென்றுள்ளதால், உலக அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என அவர் கூறினார்.கடந்த கல்வியாண்டு, ஏ.வி.பி., பள்ளியில், பிளஸ் 2 முடித்த ஈஸ்வரமூர்த்தி, நடப்பாண்டில் கல்லுாரியில் சேர உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X