குதிரை உடலில் பா.ஜ., சின்னம்; மேனகா நிறுவனம் போலீசில் புகார்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
இந்துார்-குதிரை உடலில் பெயின்டை பயன்படுத்தி பா.ஜ., கொடி வரைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசில் புகார் செய்துள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் நகரில் நேற்று, மத்திய விமான போக்குவரத்து துறை

இந்துார்-குதிரை உடலில் பெயின்டை பயன்படுத்தி பா.ஜ., கொடி வரைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசில் புகார் செய்துள்ளது.latest tamil news


மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் நகரில் நேற்று, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில், மக்கள் ஆசீர்வதிக்கும் யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில், பா.ஜ., கட்சிக் கொடியின் வண்ணம் பூசப்பட்டு, தாமரை சின்னமும் வரையப்பட்ட குதிரை ஒன்றும் அழைத்து வரப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக, 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவன இந்துார் கிளை நிர்வாகி, சன்யோகீதாகஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். குதிரை உடலில் பெயின்ட் பயன்படுத்தி, கட்சி சின்னம் வரைந்தவர்கள் மீது, விலங்குகளை கொடுமைப்படுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.விலங்குகளின் நலன் காக்கும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், மேனகாவால் நடத்தப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202116:52:49 IST Report Abuse
அப்புசாமி தாமரையை பச்சை குத்திக்கொள்ளலாமே...
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
21-ஆக-202114:36:59 IST Report Abuse
Srprd This shows that Bjp is in no way different from other political parties. Those who did this must be tried under very strict rules and punished. I am outraged at this brutality. Utterly inhuman and thoughtless to torture an animal like this.
Rate this:
Cancel
21-ஆக-202111:06:08 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்து மாட்டுப் பொங்கல் நேரத்தில்🤫 மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டினால் வழக்குப் போடுவார்கள் . கோவில் யானைகளுக்கு விபூதி திருமண் இட்டால் கூட வம்பு ?
Rate this:
rajendran - palakkad,இந்தியா
21-ஆக-202119:25:59 IST Report Abuse
rajendranஆரூர் ராங் ,அருமை,சரியாகச் சொன்னீர்கள்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஆக-202123:32:11 IST Report Abuse
தமிழவேல் அறிவுகளா, கொம்பு, நகம், முடி இவைகளில் இரத்த ஓட்டம் கிடையாது. அதனால்தான் வெட்டவும் சாயம் nail polish அடிக்கவும் முடிகின்றது. சில வியாதிகளுக்கு (புகையை நிறுத்த, வலிநிவாரணம்.....) தோலில் ஒட்டிக்கொள்ளும் சில medical sticking plaster எப்படி வேலை செய்கின்றது தெரியுமா ? மருந்துகளை தோல் கிரகிக்கும். அதுபோல பெயிண்டுகளையும் தோல் கிரகித்து இரத்தத்தில் சேர்த்துவிடும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X