அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வி.எச்.பி., வேதாந்தம் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வி.எச்.பி., வேதாந்தம் எச்சரிக்கை

Added : ஆக 21, 2021
Share
கோவை:'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும்' என, விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் - தமிழ்நாடு நிறுவனத் தலைவர் வேதாந்தம் கூறியதாவது:ஒரு கல்லை செதுக்கி ஆவாஹனம் செய்து, பிரதிஷ்டைக்கு பின், வேத மந்திரங்களை பாராயணம் செய்து இறை சக்தி ஏற்படுத்துகின்றனர். அதன்பின்,

கோவை:'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும்' என, விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் - தமிழ்நாடு நிறுவனத் தலைவர் வேதாந்தம் கூறியதாவது:ஒரு கல்லை செதுக்கி ஆவாஹனம் செய்து, பிரதிஷ்டைக்கு பின், வேத மந்திரங்களை பாராயணம் செய்து இறை சக்தி ஏற்படுத்துகின்றனர். அதன்பின், பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இறைவன் குறித்து எந்த விஷயத்தையும் முழுமையாக தெரியாதவர்கள், எப்படி இறை வழிபாட்டை நடத்துவர்.ஹிந்து மதத்துக்கான ஆகம, வேத நடைமுறைகள் 3,000 ஆண்டுகள் பழமையானது. இதுவரை மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட, கோவில் நடைமுறைகள் மாற்றப் படவில்லை. ஏனென்றால், அன்றைய மன்னர்கள் இறைவனை பற்றியும், இறை சக்தியை பற்றியும் நன்கு உணர்ந்து இருந்தனர்.

ஒரு துறை விஷயத்தில், அத்துறை பற்றி அனுபவமோ, ஆதாரமோ இல்லாதவர்கள் தலையீடு செய்வது தவறு. ஹிந்து சமய மரபுகளை மீறி, அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர்களாக்க அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கென, யாரிடமும் ஆலோசனை பெறாமல் நடைமுறைப் படுத்தியது தவறு. இது தெய்வக் குற்றம்.திருமூலர் கூற்றுப்படி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

தற்போது அதர்மம் மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து வருகிறது. தமிழக அரசு, தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X