உதவித்தொகை கிடைக்காமல் முதியோர் தவிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால், முதியோர் உதவித்தொகை கோரும் விண்ணப்பங்கள், கடந்த ஆறு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.தமிழக அரசு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதிர்கன்னியர் உட்பட, ஐந்து வகை திட்டங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறது. பயனாளிகள் வங்கி கணக்கு மூலம், மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 90 ஆயிரம் பேர் பயன்

திருப்பூர்:கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால், முதியோர் உதவித்தொகை கோரும் விண்ணப்பங்கள், கடந்த ஆறு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.தமிழக அரசு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதிர்கன்னியர் உட்பட, ஐந்து வகை திட்டங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறது. பயனாளிகள் வங்கி கணக்கு மூலம், மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 90 ஆயிரம் பேர் பயன் பெறுகின்றனர். கடந்த பிப்., மாதத்திற்கு பிறகு, புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை.சட்டசபை தேர்தல் காரணமாக, புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதிய உதவி வழங்குவது நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தும், பட்ஜெட் கூட்டம் நடக்காததால், இதுநாள் வரை புதிய பயனாளிகள் தேர்வுக்கு அனுமதியில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் மட்டும், சில பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய உதவி பெறும் உத்தரவு வழங்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக, விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஒவ்வொரு தாலுகாவிலும், 500 முதல், 700 விண்ணப்பங்கள் வரை தேக்கமடைந்துள்ளன.தமிழக அரசு, இதற்கென கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதிய உதவி கிடைக்கும். அதுவரை, இறக்கும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும், ஓய்வூதிய உதவி புதிய பயனாளிக ளுக்கு வழங்கப்படும்.சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் கூறுகையில், 'ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த, ஓய்வூதியம் கோரும் விண்ணப்பங்கள், சரிபார்த்து, கிராம நிர்வாக அலுவலர் அறிக்கைகளை பெற்று, தயாராக வைத்திருக்கிறோம்.சமூக பாதுகாப்பு திட்டத்தில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, தேங்கியுள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.தனி துணை கலெக்டர் சிவகுமாரியிடம் கேட்டபோது,''விண்ணப்பம் நிலுவையில் இருப்பதால், அரசிடம் கூடுதல் ஒதுக்கீடு கேட்டுள்ளோம்; நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், தகுதியான விண்ணப்பதாரருக்கு ஓய்வூதிய உதவி கிடைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X