தரமற்ற ரோடு பணி: தடுத்தனர் மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரமற்ற ரோடு பணி: தடுத்தனர் மக்கள்

Added : ஆக 21, 2021
Share
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 14வது வார்டு சோளிபாளையம் பாட்டையப்பன் நகர் முதல் வீதியில் தார் ரோடு போட மாநகராட்சி பொது நிதியில் இருந்து 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரோடு போடும் பணி நேற்று துவங்கியது; சிறிய ஜல்லி கற்கள் மூலம் ஒரு இன்ச் அளவே ரோடு போடப்பட்டது.இதை பார்த்த மக்கள், 'ரோடு தரமானதாக இல்லை; தரமான ரோடு போட வேண்டும்'' என ரோடு பணியை தடுத்து
 தரமற்ற ரோடு பணி: தடுத்தனர் மக்கள்

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 14வது வார்டு சோளிபாளையம் பாட்டையப்பன் நகர் முதல் வீதியில் தார் ரோடு போட மாநகராட்சி பொது நிதியில் இருந்து 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரோடு போடும் பணி நேற்று துவங்கியது; சிறிய ஜல்லி கற்கள் மூலம் ஒரு இன்ச் அளவே ரோடு போடப்பட்டது.இதை பார்த்த மக்கள், 'ரோடு தரமானதாக இல்லை; தரமான ரோடு போட வேண்டும்'' என ரோடு பணியை தடுத்து நிறுத்தினர். ''எம்.எல்.ஏ., வந்து ரோட்டை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் ரோடு போட விடுவோம்'' என்றனர். எம்.எல்.ஏ., விஜயகுமார், அங்கு வந்து ரோட்டை ஆய்வு செய்தார். தரத்துடன் ரோடு அமைக்க அதிகாரிகளை கேட்டு கொண்டார். பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X