பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காய வரத்து அதிகரிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பொங்கலுார்:வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை நடந்து வருகிறது. நடப்பு சீசனில் நல்ல விலைக்கு விற்றதால் பல விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.தற்போது வெங்காய வரத்து அபரிமிதமாக உயர்ந்துள்ளது. அதிகளவில் வெங்காயம் விற்பனைக்கு வருவதால் விற்பனை மந்தம் அடைந்துள்ளது. இதனால், கடைகளில் மூன்று கிலோ 100 ரூபாய்க்கு

பொங்கலுார்:வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை நடந்து வருகிறது. நடப்பு சீசனில் நல்ல விலைக்கு விற்றதால் பல விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.தற்போது வெங்காய வரத்து அபரிமிதமாக உயர்ந்துள்ளது. அதிகளவில் வெங்காயம் விற்பனைக்கு வருவதால் விற்பனை மந்தம் அடைந்துள்ளது. இதனால், கடைகளில் மூன்று கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வியாபாரிகள் கூறியதாவது:உள்ளூரில் விற்பனைக்காக சின்ன வெங்காயம் குவிந்து வருவதால் குறைந்தபட்சம் கிலோ, 15 ரூபாய் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த வெங்காயம் கிலோ அதிகபட்சமாக, 42 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. உள்ளூரில் வெங்காயத்துக்கு போதிய விலை இல்லை.இதனால், விற்பனை மந்தமாகவே உள்ளது. குறைந்த விலைக்கு விற்றால், விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகாது என்பதால் பல விவசாயிகள் இருப்பு வைக்கின்றனர். நல்ல மழை பெய்து இருந்தால் வெங்காயம் அழுகும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். அறுவடை பணிகளும் தாமதமாகி இருக்கும். மழை இல்லாததால் அதிக அளவில் வரத்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X