பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தினரா? உறுதிப்படுத்துகிறது, கல்வித்துறை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:பள்ளிகள் செப்., மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், மாவட்டத்தில் ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யும் பணிகளை துவக்கியுள்ளது கல்வித்துறை.ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் அடிப்படை

திருப்பூர்:பள்ளிகள் செப்., மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், மாவட்டத்தில் ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யும் பணிகளை துவக்கியுள்ளது கல்வித்துறை.ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயத்த பணிகள் பள்ளிகள் நடந்து வருகின்றன.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளபோது, பள்ளிகள் திறக்கப்படுவதால், ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை, உறுதி செய்வது அவசியமாகியுள்ளது. பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், முதல் டோஸ், இரண்டாம் டோஸ் வாரியாக எண்ணிக்கை, போடாதபட்சம், அதற்கான மருத்துவ காரணங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X