பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவரலட்சுமி விரதம்; மனமுருக வேண்டிய பெண்கள்!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஸ்ரீவரலட்சுமி நோன்பு தினமான நேற்று, வரலட்சுமி விரதம் கடைபிடித்து, பக்திப்பெருக்குடன் பெண்கள் வரலட்சுமி தாயாரை மனமுருக வேண்டினர்.ஆடி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை நாளில், குடும்ப நலனுக்காக சுமங்கலி பெண்கள், மகாலட்சுமி விரதம் என்ற வரலட்சுமி விரதமிருந்து வழிபடுகின்றனர். நேற்று, பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும், மகாலட்சுமி தாயார்
 ஸ்ரீவரலட்சுமி விரதம்; மனமுருக வேண்டிய பெண்கள்!

திருப்பூர்:ஸ்ரீவரலட்சுமி நோன்பு தினமான நேற்று, வரலட்சுமி விரதம் கடைபிடித்து, பக்திப்பெருக்குடன் பெண்கள் வரலட்சுமி தாயாரை மனமுருக வேண்டினர்.ஆடி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை நாளில், குடும்ப நலனுக்காக சுமங்கலி பெண்கள், மகாலட்சுமி விரதம் என்ற வரலட்சுமி விரதமிருந்து வழிபடுகின்றனர். நேற்று, பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும், மகாலட்சுமி தாயார் சன்னதியில் வரலட்சுமி வழிபாடும், சிறப்பு பூஜையும் நடந்தது.திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி, பெரும்பண்ணை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், சுமங்கலி பூஜையும், வரலட்சுமி விரத வழிபாடும் நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, பூமி நீளா சமேத வரதராஜபெருமாள், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு பெருந்தேவி தாயார், வரலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு வெள்ளைக்கல் ஆரம் மற்றும் கிரீடம் சூடி, மலர்மாலைகளுடன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், பல்வேறு கோவில்களில், வரலட்சுமி விரத வழிபாடுகள், சுமங்கலி பூஜைகள் நடந்தன.வீடுகளில்...விரதம் மேற்கொண்ட சுமங்கலி பெண்கள், வீடுகளில், வரலட்சுமி தாயாரை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்தனர்.திருப்பூர், வெங்கடேஸ் நகர் செளடேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மகாலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X