சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு பின் பிழைத்தது மான்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அருகே தெக்கலுார் குடியிருப்புப்பகுதிக்குள், உணவு தேடி வந்த, 2 வயதுள்ள ஆண் மானை, தெரு நாய்கள் விரட்டின. மிரண்டு ஓடிய மான், மயங்கிய நிலையில், அங்குள்ள புதரில் விழுந்தது. தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள், மானை மீட்டு, தெக்கலுார் கால்நடை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.கால்நடை டாக்டர் மானுக்கு சிகிச்சை வழங்கினார். மயங்கிய நிலையில் இருந்த மானுக்கு, ஊட்டச்சத்து
 சிகிச்சைக்கு பின் பிழைத்தது மான்

அவிநாசி:அவிநாசி அருகே தெக்கலுார் குடியிருப்புப்பகுதிக்குள், உணவு தேடி வந்த, 2 வயதுள்ள ஆண் மானை, தெரு நாய்கள் விரட்டின. மிரண்டு ஓடிய மான், மயங்கிய நிலையில், அங்குள்ள புதரில் விழுந்தது. தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள், மானை மீட்டு, தெக்கலுார் கால்நடை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.கால்நடை டாக்டர் மானுக்கு சிகிச்சை வழங்கினார். மயங்கிய நிலையில் இருந்த மானுக்கு, ஊட்டச்சத்து நீர் வழங்கி, தெம்பூட்டினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் மான் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், அதன் வாழ்விடத்தில் மான் கொண்டுசென்று விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X