சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை; ஐவர் சிக்கினர்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:தாராபுரம், திருமலைப்பாளையத்தில், விக்னேஷ், 28, என்பவர், வெட்டி கொல்லப்பட்டார்.விக்னேஷ் கொலை வழக்கை விசாரித்த போலீசார், சங்கர் மற்றும் விக்னேஷ் தரப்பினருக்கு இடையே நடந்த பிரச்னையை கண்டறிந்தனர். பழிக்கு பழி வாங்கும் வகையில், ஐந்து கொலைகள் நடந்தது, விசாரணையில் தெரியவந்தது.எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவுப்படி, தாராபுரம், மூலனுார், உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
 வாலிபர் கொலை; ஐவர் சிக்கினர்

திருப்பூர்:தாராபுரம், திருமலைப்பாளையத்தில், விக்னேஷ், 28, என்பவர், வெட்டி கொல்லப்பட்டார்.விக்னேஷ் கொலை வழக்கை விசாரித்த போலீசார், சங்கர் மற்றும் விக்னேஷ் தரப்பினருக்கு இடையே நடந்த பிரச்னையை கண்டறிந்தனர். பழிக்கு பழி வாங்கும் வகையில், ஐந்து கொலைகள் நடந்தது, விசாரணையில் தெரியவந்தது.எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவுப்படி, தாராபுரம், மூலனுார், உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.மதுரையில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, சங்கர் தரப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, விக்னேைஷ கொன்றதை ஊர்ஜிதம் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பாஸ்கர், மணிகண்டன் ஆகிய இருவர், மதுரை வாடிபட்டி கோர்ட்டில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர்.கொலை வழக்கில், சேலத்தை சேர்ந்த மனோஜ், 22; விருதுநகரை சேர்ந்த செல்வம், 24 மற்றும் ஒரு சிறுவனையும் கைது செய்தனர்.விசாரணையை தொடர்ந்து, விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி, 20; கரூர் பரமத்தி, கிரசர்மேடு பகுதியை சேர்ந்த சுகன்ராஜ், 23 ஆகிய இருவரையும், தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.குற்றவாளிகள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு 'டூ வீலர்'களும், இரண்டு மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.குற்றவாளிகள், தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X