150 நாட்கள் வேலை திட்டம் வேளாண் தொழில் முடங்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

150 நாட்கள் வேலை திட்டம் வேளாண் தொழில் முடங்கும்

Added : ஆக 21, 2021
Share
பல்லடம்:தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விவசாய தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.தமிழக பட்ஜெட்டில், 'தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், 100 நாட்களாக இருந்த வேலை நாட்கள், 150 ஆக உயர்த்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் ஊதியம் 273ல் இருந்து 300

பல்லடம்:தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விவசாய தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழக பட்ஜெட்டில், 'தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், 100 நாட்களாக இருந்த வேலை நாட்கள், 150 ஆக உயர்த்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் ஊதியம் 273ல் இருந்து 300 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய தொழில் முடங்கும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து: இத்திட்டத்தை விவசாய தொழிலுடன் இணைக்குமாறு, பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். அதை நடைமுறைப் படுத்தாமல், 150 நாட்களாக வேலை நாட்களை உயர்த்தியதோடு, ஊதியத்தையும் உயர்த்தியது கவலைக்குரியது. 300 முதல் 500 ரூபாய் கொடுத்தாலும் விவசாயப் பணிக்கு ஆள் வருவதில்லை. ஊதிய உயர்வால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன்: வேலை உறுதி திட்டத்தால், வேலைவாய்ப்பு இல்லாத ஏழைகள் பயன் பெறுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. ஆனால், விவசாய தொழில் நிறைந்த பகுதிகளில், இத்திட்டத்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கப் படுகிறது.கூலி தொழிலாளர்கள் பலர், விவசாய பணியை தவிர்க்கவே விரும்புகின்றனர்; தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X