அன்னுார்:கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து பதிலளிக்க, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், அல்லப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 2018 ஏப்ரல் மற்றும் மே மாதம் அறிவிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. செப். 1ல் நடந்த தேர்தலில், ஓட்டுச்சாவடியை ஒரு கும்பல் சூறையாடியது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.கடந்த 2020ம் ஆண்டு மார்ச் தேர்தல் நடந்தது. இதில் ஆறுமுகம் அணியை சேர்ந்த பலர் தோல்வியடைந்தனர். இந்நிலையில், முறைகேடாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்; இறந்துபோன வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என பல்வேறு புகார்களை தெரிவித்து, ஆறுமுகம் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கூட்டுறவு சங்கங்களின் உயரதிகாரியிடம் இதுகுறித்து மனு தாக்கல் செய்து தீர்வு பெறும் படியும், மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் விசாரணை செய்து, இறுதி உத்தரவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.ஆறுமுகம் அணியினர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் கோவை மாவட்ட துணை பதிவாளரிடம் புகார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, துணைப்பதிவாளர், அல்லப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தல் அலுவலர், கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களிடம், இந்த புகார் குறித்து பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வரும் 29ம் தேதிக்குள் இதுகுறித்து விசாரித்து இறுதி உத்தரவு வழங்கப்பட வேண்டும் என்பதால், விசாரணை சுறுசுறுப்பாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE