நிருபர்களை ஆப்கனுக்கு செல்ல கூறிய பா.ஜ., நிர்வாகியால் சர்ச்சை..

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
போபால்-மத்திய பிரதேசத்தில், எரிபொருள் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், ஆப்கானிஸ்தானுக்கு செல்லுமாறு, பா.ஜ., நிர்வாகி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கத்னி மாவட்டத்தில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாவட்ட பா.ஜ.,

போபால்-மத்திய பிரதேசத்தில், எரிபொருள் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், ஆப்கானிஸ்தானுக்கு செல்லுமாறு, பா.ஜ., நிர்வாகி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news


மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கத்னி மாவட்டத்தில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாவட்ட பா.ஜ., தலைவர் ராம்ரத்தன் பாயல் பங்கேற்றார். அப்போது, அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பாயல் பேசியதாவது:நீங்கள் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு சென்று விடுங்கள். அங்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. அங்கு சென்று, பெட்ரோல் வாங்கிக் கொள்ளுங்கள்.


latest tamil news


நம் நாட்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின்கீழ், மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.அதை யாரும் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. தகுதி மிக்க பத்திரிகையாளர்களாக உள்ள நீங்கள், நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து நன்கு அறிவீர்கள்.கொரோனா பரவலை, பிரதமர் மோடி சிறந்த முறையில் கட்டுப்படுத்தி வருகிறார். 80 கோடி மக்களுக்கு, இன்று வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு அலைகளை சமாளித்துள்ள நாம், மூன்றாம் அலையை எதிர்கொள்ள இருக்கிறோம். இந்த நேரத்தில், நீங்கள் எரிபொருள் விலை குறித்து கேள்வி எழுப்புவது சரியானதாக இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-ஆக-202113:40:27 IST Report Abuse
R.RAMACHANDRAN தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் இலவசமாக உணவு தானியங்கள்,இலவசமாக எரிவாயு இணைப்பு இலவச வீடு கழிப்பறை கட்ட அரசு நிதி உதவி இதையெல்லாம் சமாளிக்க தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கப்பட மானியங்கள் ஒழிப்பு.இதுதான் நல்லாட்சி பதவி வெறி பிடித்தவர்களுக்கு.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஆக-202112:51:04 IST Report Abuse
Pugazh V , "விடியல் அரசு, திராவிட ஆட்சி, சுடலை கதறுபவர்கள் இனிமேல் வாயே திறக்கப்படாது.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஆக-202111:45:06 IST Report Abuse
Abdul Aleem காத்திருங்கள் நல்ல ஆட்சி என்பது இரண்டாயிரத்து இருபத்தி நான்கில் தெரிந்துவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X