பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுயானை கூட்டத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையில் கரையோரம் முகாமிட்ட காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்தவாறு ரசித்தனர்.மாட்டுப்பட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்குள்ள மாட்டு பண்ணைக்கு தேவையான தீவனத்திற்கு அணையின் கரையோரம் 600 ஏக்கரில் புல் வளர்க்கப்படுகிறது. அவை ஆண்டு முழுவதும் பசுமையாக காட்சியளிக்கும் என்பதால் அங்கு காட்டு யானைகள்
 காட்டுயானை கூட்டத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையில் கரையோரம் முகாமிட்ட காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்தவாறு ரசித்தனர்.

மாட்டுப்பட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்குள்ள மாட்டு பண்ணைக்கு தேவையான தீவனத்திற்கு அணையின் கரையோரம் 600 ஏக்கரில் புல் வளர்க்கப்படுகிறது. அவை ஆண்டு முழுவதும் பசுமையாக காட்சியளிக்கும் என்பதால் அங்கு காட்டு யானைகள் தீவனத்திற்காக நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம்.

அவை அவ்வப்போது கரையோரம் உலா வருவதை சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்தவாறு ரசிப்பர். அணையில் சுற்றுலா படகுகள் இயக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆக.8 ல் துவங்கியது. அணையின் கரையோரம் நேற்று இரண்டு குட்டிகள் உட்பட ஏழு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.அவற்றை படகில் சவாரி செய்தவாறு பயணிகள் ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X