பொது செய்தி

தமிழ்நாடு

முத்து முனியப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் உற்சாகம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே அன்னை இந்திரா நகரில், முத்து முனியப்பன் கோவில் உள்ளது. கோவிலில் வலம்புரி செல்வ விநாயகர், பாலமுருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக பணிகள் நடந்தன.அரவிந்த் நகரில் அமைந்துள்ள யோக விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து வாஸ்து சாந்தி பூஜை செய்தனர். இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன.

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே அன்னை இந்திரா நகரில், முத்து முனியப்பன் கோவில் உள்ளது. கோவிலில் வலம்புரி செல்வ விநாயகர், பாலமுருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக பணிகள் நடந்தன.அரவிந்த் நகரில் அமைந்துள்ள யோக விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து வாஸ்து சாந்தி பூஜை செய்தனர். இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. விமான கலசம், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தல், மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கோபுர கலசத்துக்கும், மூலவர் முத்துமுனியப்பன், வலம்புரி செல்வ விநாயகர், பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கும் புனித தீர்த்தம் ஊற்றி, மகா கும்பாபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னை இந்திரா நகர், அரவிந்த் நகர், கருப்பராயபுரம், இந்திரா நகர், ஐயப்பன் நகர், கருப்பராயன் குட்டை ஆகிய ஊர்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X