போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய மக்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னூரில் நேற்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் நீண்ட நேரம் தவித்தனர்.ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால், நேற்று காலை முதல் மாலை வரை, அன்னூர் நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. கோவை சாலையில் அல்லிக்காரம்பாளையம் பிரிவு வரையும், சத்தி சாலையில், தாசபாளையம் பிரிவு வரையும், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவிநாசி சாலையில், நாகமாபுதூர் வரை
 போக்குவரத்து நெரிசலில்  சிக்கி திணறிய மக்கள்

அன்னுார்:அன்னூரில் நேற்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் நீண்ட நேரம் தவித்தனர்.ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால், நேற்று காலை முதல் மாலை வரை, அன்னூர் நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. கோவை சாலையில் அல்லிக்காரம்பாளையம் பிரிவு வரையும், சத்தி சாலையில், தாசபாளையம் பிரிவு வரையும், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவிநாசி சாலையில், நாகமாபுதூர் வரை வாகனங்கள் காத்திருந்தன. பிரதான சாலையில் இருந்து சில வாகனங்கள் தென்னம்பாளையம் சாலை மற்றும் ஓதிமலை சாலையில் திரும்ப முயன்றதால் வாகனங்களில் நெரிசலில் சிக்கின.போலீசார், கைகாட்டி மற்றும் பிரதான சாலையில் நின்று ஒழுங்குபடுத்தியும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்த பின்னே செல்ல முடிந்தது. 20 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு புறவழிச்சாலை அமைப்பதே ஒரே தீர்வு எனினும், கிழக்கு புறவழிச்சாலை இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X