சத்தமில்லாம கொட்டிட்டு போறது| Dinamalar

சத்தமில்லாம கொட்டிட்டு போறது

Added : ஆக 21, 2021
Share
கோவில்பாளையம்:கோவில்பாளையம் பேரூராட்சியில், ஒரு கி.மீ., தொலைவுக்கு, பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதால்மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.கோவை- - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த குரும்பபாளையம் உள்ளது. இங்கிருந்து பச்சாபாளையம் செல்லும் சாலையில், தனியார் கல்லூரியில் துவங்கி, ஒரு கி.மீ., துாரத்துக்கு சாலையோரத்தில், டன் கணக்கில் பிளாஸ்டிக்
  சத்தமில்லாம கொட்டிட்டு போறது

கோவில்பாளையம்:கோவில்பாளையம் பேரூராட்சியில், ஒரு கி.மீ., தொலைவுக்கு, பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதால்மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.கோவை- - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த குரும்பபாளையம் உள்ளது. இங்கிருந்து பச்சாபாளையம் செல்லும் சாலையில், தனியார் கல்லூரியில் துவங்கி, ஒரு கி.மீ., துாரத்துக்கு சாலையோரத்தில், டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பை கொட்டப்பட்டு உள்ளன.அப்பகுதி மக்கள் கூறியதாவது:பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி என பல தரப்பினரும், டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பையை, இங்கு சாலையோரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். குப்பை காற்றில் பறந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்கிறது. இப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், பிளாஸ்டிக் கழிவை உட்கொண்டு பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகளை தடை செய்து, அரசு உத்தரவிட்டு பல ஆண்டுகளாகியும், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள், பிளாஸ்டிக் கழிவை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடத்தில் கொட்டி வருகின்றன. இதனால் இப்பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.இங்கு குப்பை கொட்டுவதை, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தடை செய்து, கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இங்குள்ள குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து, உரிய முறையில் அப்புறப்படுத்தவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X