சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி விபத்து: இருவர் பலியான சோகம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 30. நண்பர் பிரேம்குமாருடன், குன்னுாரில் இருந்து, டூவீலரில் கோவையிலுள்ள வடமதுரைக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே, பின்னால் வந்த லாரி, டூவீலரில் மோதியது. ரவிச்சந்திரன், லாரியின் சக்கரத்தில் சிக்கி, அதே இடத்தில் பலியானார். பிரேம்குமார், லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பெ.நா.பாளையம்:நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 30. நண்பர் பிரேம்குமாருடன், குன்னுாரில் இருந்து, டூவீலரில் கோவையிலுள்ள வடமதுரைக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே, பின்னால் வந்த லாரி, டூவீலரில் மோதியது. ரவிச்சந்திரன், லாரியின் சக்கரத்தில் சிக்கி, அதே இடத்தில் பலியானார். பிரேம்குமார், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.* அன்னுார் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன், 72. இவரது மகன் பொன்னுச்சாமி, 50. இருவரும், டூ வீலரில் கடந்த 6ம் தேதி கோவை நோக்கி பயணித்தனர்.கரட்டுமேடு அருகே, அதே திசையில் சென்ற டிப்பர் லாரி, டூவீலரில் மோதியது. கருப்பண்ணனும், பொன்னுச்சாமியும் படுகாயமடைந்தனர்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், கருப்பண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார். கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X