அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்தி மண் திருடுவதாக கலெக்டரிடம் புகார்| Dinamalar

அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்தி மண் திருடுவதாக கலெக்டரிடம் புகார்

Added : ஆக 21, 2021
Share
தேனி: திட்டப்பணிக்கான அனுமதி நடைச் சீட்டை தவறாக பயன்படுத்தி மண் திருட்டு நடப்பதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் முரளீதரனிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த அமைப்பின் தலைவர் ஹானஸ்ட்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய புகாரில், கம்பத்தில் மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை சோதனை செய்ததில்,' பைபாஸ் ரோடு பணிக்கு மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதி சீட்டை

தேனி: திட்டப்பணிக்கான அனுமதி நடைச் சீட்டை தவறாக பயன்படுத்தி மண் திருட்டு நடப்பதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் முரளீதரனிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த அமைப்பின் தலைவர் ஹானஸ்ட்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய புகாரில், கம்பத்தில் மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை சோதனை செய்ததில்,' பைபாஸ் ரோடு பணிக்கு மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தி தனிநபர் காளவாசலுக்கு மண் எடுத்து செல்கின்றனர்.

புலிகுத்தியில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவும், அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடங்களிலும் மண் கொள்ளை நடத்தியுள்ளனர். நில உரிமையாளர் புகாரில் மண் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை அதிகாரிகள் பிடித்தனர்.ஆனால் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் மண் கொள்ளையை தடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X