பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைக்கு போரான் சத்து மிக அவசியம்: வேளாண் துறை அறிவுறுத்தல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:தென்னை பயிருக்கு, போரான் சத்தின் முக்கியத்துவம் குறித்தும், பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், தெற்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி தென்னை விவசாயிகள், தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் ஆகிய பேரூட்ட உரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நுண்ணாட்ட உரங்களுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக, நுண்ணாட்டமான போரான் பற்றாக்குறையால்,

பொள்ளாச்சி:தென்னை பயிருக்கு, போரான் சத்தின் முக்கியத்துவம் குறித்தும், பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், தெற்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி தென்னை விவசாயிகள், தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் ஆகிய பேரூட்ட உரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நுண்ணாட்ட உரங்களுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக, நுண்ணாட்டமான போரான் பற்றாக்குறையால், தென்னை மகசூலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை விளக்கியுள்ளது. தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:தென்னை வளர்ச்சிக்கும், மகசூலுக்கும் முக்கியமான போரான் சத்து, மண்ணின் அமில காரத்தன்மை, 5.5 - 7 என்ற அளவில் இருக்கும் போது, இயற்கையாகவே தேவையான அளவுக்கு கிடைத்து விடுகிறது. அமில காரத்தன்மை, 7.5யை தாண்டும் போது, மண்ணில் போரான் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால், பயிரின் இளம் திசுக்கள் வளர்ச்சி, புரதம் மற்றும் சர்க்கரையை தேவையான இடத்துக்கு கடத்துதல் ஆகியவை தடைபடும். போரான் பற்றாக்குறையின் அறிகுறிகளாக, இளம் ஓலைகள், பூம்பாளைகள், குரும்பைகள் உருக்குலைந்து, வடிவம் மாறி காணப்படும். குரும்பைகள் அதிகம் உதிர்ந்து, மகசூல் பாதிக்கப்படும்.போரான் பற்றாக்குறையை சரி செய்ய, இளம் கன்றுகளுக்கு போராக்ஸ், 0.2 சதவீதம் இலைவழியாக தெளிக்க வேண்டும். ஒரு ஆண்டு ஆன மரத்துக்கு, ஆண்டுக்கு, 5 - 10 கிராம்; 2 - 3 ஆண்டு ஆன மரத்துக்கு, 15 - 20 கிராம்; நான்கு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மரத்துக்கு, 30 - 50 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட இந்த அளவை இரண்டாக பிரித்து, ஆண்டின் ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இடுவது நல்லது. இத்துடன், பரிந்துரைக்கப்பட்ட மற்ற பேரூட்ட, நுண்ணுாட்ட சத்துக்களையும் சரியாக கொடுத்தால், தென்னை நோய் எதிர்ப்பு திறனுடன், நல்ல மகசூல் கொடுக்கும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X