ஆழியாறு ஆற்றை காக்க கோரிக்கை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பறந்த மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு ஆற்றை காக்க கோரிக்கை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பறந்த மனு

Added : ஆக 21, 2021
Share
ஆனைமலை:ஆனைமலையில், ஆழியாறு ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் ஆகிய பேரூராட்சிகளில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. ஆனைமலை, ஒடையகுளம் பகுதிகளின் கழிவுநீர் ஒன்றாக சேர்ந்து, ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் ஆழியாறு ஆற்றில் கலப்பது, 15
 ஆழியாறு ஆற்றை காக்க கோரிக்கை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பறந்த மனு

ஆனைமலை:ஆனைமலையில், ஆழியாறு ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் ஆகிய பேரூராட்சிகளில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. ஆனைமலை, ஒடையகுளம் பகுதிகளின் கழிவுநீர் ஒன்றாக சேர்ந்து, ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் ஆழியாறு ஆற்றில் கலப்பது, 15 ஆண்டுகளாக தொடர்கிறது.ஆனைமலையில் துவங்கி, வேட்டைக்காரன்புதுார் வரையில், பல இடங்களில் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. ஆனைமலையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலைய இயந்திரம், குறைவான கொள்ளளவுடன் இருப்பதால் பயனற்றுப்போனது. இதனால், ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே, கழிவுநீர் தேங்கி நின்று, நீர் மாசடைந்து ஆகாயத்தாமரைச் செடிகள் முளைத்துள்ளன. ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில், பிரச்னையின் தீவிரம் குறித்து அரசுக்கு தெரிவிக்க, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர். மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X