பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் வலுக்கும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான, சோலையாறு அணை, கடந்த மாதம், 23ம் தேதி நிரம்பியது. கடந்த ஒரு வாரமாக, வால்பாறையில் பருவமழையின் தீவிரம் குறைந்து, சாரல்மழையாக பெய்தது.இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும்
 மீண்டும் வலுக்கும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து

வால்பாறை:வால்பாறையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான, சோலையாறு அணை, கடந்த மாதம், 23ம் தேதி நிரம்பியது. கடந்த ஒரு வாரமாக, வால்பாறையில் பருவமழையின் தீவிரம் குறைந்து, சாரல்மழையாக பெய்தது.இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், கடந்த இரு நாட்களாக மீண்டும் கனமழை பெய்கிறது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால், சோலையாறு அணை, கடந்த, 28 நாட்களாக நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.91 அடியாக இருந்தது. பரம்பிக்குளம் அணையில், 68 அடி நீர்மட்டம் இருந்தது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X