பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வடி மேலாண்மை திட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டு பயிற்சி: செப்.,15 வரை விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
உடுமலை;அரசு தொழிற்பயிற்சி மையங்களில், செப்., 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) உட்பட, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2021-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15 வரை விண்ணப்பங்கள்

உடுமலை;அரசு தொழிற்பயிற்சி மையங்களில், செப்., 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) உட்பட, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2021-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு, 14 முதல் 40 வயது வரை அனுமதி உண்டு; பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதி வாய்ந்த, மாணவ, மாணவியர் சேர்ந்து கொள்ளலாம்.கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, இலவச லேப்டாப், சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், மாதம்தோறும், 750 ரூபாய் பயிற்சி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட உதவி இயக்குனர் 0421-2230500; 9080276172 ஆகிய எண்களிலும், உடுமலை அரசு ஐ.டி.ஐ., முதல்வரை, 94990 55700 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கிணத்துக்கடவு, ஆக. 21-

கிணத்துக்கடவு, வடபுதுாரில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் சார்பில், விவசாயிகளுக்கான வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் தலைமை வகித்தார். வேளாண்உதவி இயக்குனர் மீனாம்பிகா, துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஓய்வு பெற்ற துணை வேளாண் இயக்குனர் மோகன்ராஜ் சாமுவேல் பேசுகையில், ''விதைப்புக்கு முன், மண்மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் எடுத்து பரிசோதிப்பது அவசியம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் கையாண்டு, பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.கோடை உழவு, உயிர் உரம், விதை நேர்த்தி, மஞ்சள் வண்ணப்பொறி, இனக்கவர்ச்சி பொறிகளை கொண்டு, பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பயிர்களில் இருக்கும் நன்மை பயக்கும் பூச்சிகளை பாதுகாப்பது அவசியம்,'' என்றார்.கால்நடை உதவி மருத்துவர் பரமேஸ்வரன் பங்கேற்று, கால்நடை பராமரிப்பு, சினைப்பிடித்தல் முதல் கன்று ஈனும் வரை செயல்படுத்த வேண்டிய நடைமுறை, கால்நடைகளை தாக்கும் நோய்கள், கால்நடை காப்பீட்டு திட்டமும் அதன் பலன்களும், பால் உற்பத்தி அதிகரிக்க, கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டிய தீவனமுறைகள் குறித்து தெரிவித்தார்.தொடர்ந்து, கன்று பராமரிப்பு, தடுப்பூசி செலுத்துவதன் அவசியம், சினை ஊசி போடும் பருவங்கள் குறித்து, விளக்கமளித்தார்.வேளாண் அலுவலர் மகேஸ்வரன், நுண்ணீர் பாசனத் திட்டங்கள், திட்டத்தில் உள்ள மானிய விபரங்கள் பற்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X