பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், போதை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, புதுத்தோட்டம்

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், போதை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, புதுத்தோட்டம் பகுதியில், 3.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த, ஏசு,52, என்பவரை கைது செய்தனர். வால்பாறை போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, எஸ்.பி., பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

நல்லாசிரியர் விருது: 8 பேர் ஆர்வம்

ஆண்டுதோறும், பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.நடப்பாண்டு, உடுமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆசிரியை, 5 ஆசிரியர்கள் என, எட்டு பேர் விண்ணப்பித்துள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, திருப்பூர் ஜெய்வாய்பள்ளியில், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் வாயிலாக நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த அறிக்கை, பள்ளிக்கல்வி இடைநிலை கல்வி பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பின், விருதுக்கான நபர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும்,' என்றனர்.

மழை பொழிவு குறைவு

பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பாசன பகுதியிலும், மானாவாரி நிலத்திலும், பயிர்கள், காய்கறி சாகுபடி தீவிரமாக மேற்கொள்ளப்படும்.இந்தாண்டு, மலைப்பகுதியில் பெய்த அளவுக்கு, சமவெளிப்பகுதியில் மழை தீவிரமடையவில்லை. இதனால், மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு போதிய, மழை நீர் கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இம்மாதம் இறுதிக்குள் மழை தீவிரமடைந்தால், மானாவாரி பயிர்கள் தப்பும். இல்லாவிட்டால், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கும் நிலை உள்ளது.

தடுப்பூசி விவகாரம்: கலெக்டருக்கு மனு

பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் மணிகண்டகுமார், கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சிக்கு கடந்த, 14ம் தேதி, மாவட்ட நிர்வாகம், 600 'டோஸ்' தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. வடுகபாளையம் மற்றும் காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா, 300 'டோஸ்' என, பிரித்து கொடுக்கப்பட்டது. வடுகபாளையத்தில், அன்று காலை, 8:00 மணிக்கு, '300 தடுப்பூசிகள் போடப்படும்' என அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டது. அடுத்த, 30 நிமிடத்தில், அந்த அறிவிப்பு அழிக்கப்பட்டு, இன்று ஊசி போடப்படாது என எழுதினர்.

பொதுமக்கள் மற்றும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் இறங்க ஆயத்தமான பின், வடுகபாளையம் மையத்தில் தடுப்பூசி போடத் துவங்கினர். அதேபோன்று, காமாட்சி நகரிலும் தடுப்பூசி போடப்படவில்லை.தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில், அரசு தடுப்பூசி ஒதுக்கியும், அதை மக்களுக்கு செலுத்தாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் கேமரா அவசியம்

வால்பாறை வரும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக, 'ரிசார்ட்' மற்றும் தங்கும் விடுதிகள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான தங்கும் விடுதிகள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என, கடந்த, 2019ல், கோவை எஸ்.பி., உத்தரவிட்டார்.ஆனால், ஒரு சில தங்கும் விடுதிகளில் மட்டுமே கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி., உத்தரவை கடைபிடிக்காத தங்கும் விடுதி உரிமையாளர்கள் மீது, உள்ளூர் போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் கூறுகையில், 'வால்பாறை நகரில் நடக்கும் திருட்டு, போக்குவரத்து பாதிப்பு, அதிவேகமாக வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட உள்ளது. வால்பாறையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டியில், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள் கூறியதாவது : ஜோத்தம்பட்டியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் முழுமையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இங்கு குடிநீர் பிரச்னையை சரி செய்ய அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. பல தெருக்களில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படவில்லை.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. இதுபோன்ற பல குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரிசெய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X