பொது செய்தி

தமிழ்நாடு

மொகரம் பண்டிகை: தீ மிதித்த பக்தர்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மொகரம் பண்டிகை அன்று பள்ளி வாசல் முன்பாக தீமிதித்து இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.முதுவன்திடல் கிராம மக்கள் காப்பு கட்டி பத்து நாட்கள் விரதமிருந்து பள்ளி வாசல் முன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பெண்கள் முக்காடிட்டு அமர அவர்கள்
 மொகரம் பண்டிகை:  தீ மிதித்த பக்தர்கள்

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மொகரம் பண்டிகை அன்று பள்ளி வாசல் முன்பாக தீமிதித்து இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

முதுவன்திடல் கிராம மக்கள் காப்பு கட்டி பத்து நாட்கள் விரதமிருந்து பள்ளி வாசல் முன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பெண்கள் முக்காடிட்டு அமர அவர்கள் தலை மீது நெருப்பு கங்குகளை வாரி கொட்டுகின்றனர். இதன் மூலம் தங்களை நோய் நொடி அண்டாது என்பது அவர்களது நம்பிக்கை,

முதுவன்திடலைச் சேர்ந்த லதா கூறுகையில்;கிராமத்தில் விளையும் நெல் உள்ளிட்ட அனைத்தும் முதலில் பள்ளி வாசலில் படைக்கப்பட்ட பின்புதான் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும், உடல் நிலை சரியில்லாவிட்டால் பள்ளி வாசலில் நேர்ந்து கொண்டால் சரியாகிவிடும், என்றார்.தீ மிதி விழாவிற்கு உருவாக்கப்படும் கங்குகளுக்கு நேர்த்தி கடனாக பலரும் கருவேல மர விறகுகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X