பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., பாசன நீர் திருட்டு தடுக்க... அதிகாரிகள் கூட்டுக்குழு தீவிர ரோந்து:தொடரட்டும் அதிரடி!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் அரசு துறை அதிகாரிகளை கொண்ட கூட்டுக்குழு அமைத்துள்ளது. இக்குழுவினர், ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்தி, வழக்கு பதிவு, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர்
  பி.ஏ.பி., பாசன நீர் திருட்டு தடுக்க... அதிகாரிகள் கூட்டுக்குழு தீவிர ரோந்து:தொடரட்டும் அதிரடி!

பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் அரசு துறை அதிகாரிகளை கொண்ட கூட்டுக்குழு அமைத்துள்ளது. இக்குழுவினர், ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்தி, வழக்கு பதிவு, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களில், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரை, கால்வாய் கரைகளில் 'சைடு போர்' அமைத்தும், நேரடியாக குழாய் அமைத்தும், மதகுகளை உடைத்தும் தண்ணீர் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதனால், ஆயக்கட்டு நிலங்களுக்கு முழுமையாக நீர் சென்றடையாததோடு, கடை மடை பாசன நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், பி.ஏ.பி., அதிகாரிகள், வருவாய்த்துறை, போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகளைக்கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர், பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரு நாட்களில், உடுமலை கால்வாய் மருள்பட்டி பகிர்மான கால்வாயில், பல இடங்களில் நீர் திருடிய, வள்ளியம்மாள், தேவராஜ், ரங்கசாமி, ரமேஷ், காளிமுத்து ஆகியோர் மீது உடுமலை, குமரலிங்கம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாயில் நீர் திருடிய, ராஜேந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, கெடிமேடு பகுதியில், மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை பொறியாளர்கள் ராஜன், தீனதயாளன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.நெகமம், ஆவலப்பம்பட்டி பகுதியில், மண்டல துணை தாசில்தார் அனுசியா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பிரதான கால்வாய், கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

.வழக்குப்பதிவு

பி.ஏ.பி., அதிகாரிகள் கூறியதாவது: பாசன நீர் திருட்டை தடுக்க, கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், அனைத்து கால்வாய்களிலும், கூட்டுக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.தண்ணீர் திருட்டு கண்டறியப்பட்டால், உடனடியாக குழாய் வெட்டப்பட்டு, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட உள்ளனர்.வணிக நோக்கம்ஆவலப்பம்பட்டியில், நடராஜன் தோட்டத்தில் கிணறுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதித்துள்ளதும்; அங்கு இருந்து வணிக நோக்கத்துக்காக தண்ணீர் எடுத்து கொண்டு செல்வதும் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

கெடிமேடு பகுதியில், கால்வாய் அருகே இருந்த, சுப்ரீம் வாட்டர் சர்வீஸ், கண்ணன் வாட்டர் சர்வீஸ் நிறுவனங்கள், வணிக நோக்கத்துக்காக கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துள்ளனர். இதனால், கால்வாயில் மறைமுக நீர் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும், விவசாய மின் இணைப்பை துண்டிக்கவும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளார். பாசன நீரை திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X