பொது செய்தி

தமிழ்நாடு

மகாலட்சுமியின் அருள் வேண்டி பெண்கள் விரதமிருந்து வழிபாடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று, வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மகாலட்சுமியின் அருள் வேண்டி, சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதம் வரலட்சுமி நோன்பு ஆகும். இந்த நாளில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து, மகாலட்சுமியை வணங்கி, மஞ்சள் சரடு, வளையல் உள்ளிட்ட பொருட்கள்
 மகாலட்சுமியின் அருள் வேண்டி பெண்கள் விரதமிருந்து வழிபாடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று, வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மகாலட்சுமியின் அருள் வேண்டி, சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதம் வரலட்சுமி நோன்பு ஆகும். இந்த நாளில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து, மகாலட்சுமியை வணங்கி, மஞ்சள் சரடு, வளையல் உள்ளிட்ட பொருட்கள் படைத்து, சுவாமியை வழிபாடு செய்வர். அதன்பின், சுமங்கலி பெண்களுக்கு, மஞ்சள் சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்குவது வழக்கம். பொள்ளாச்சியிலுள்ள கோவில்களில், இந்தாண்டும், வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட, ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது. துளசி, ரோஜா, அரளி, சம்பங்கி, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.ஊரடங்கு காரணமாக, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் பெண்கள், வரலட்சுமி விரதம் கடைபிடித்து மகாலட்சுமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X