பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணி மாத முதல் முகூர்த்தம் 'களை' கட்டிய கடை வீதிகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
உடுமலை:கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதியில்லாததால், உப்புக்கூடை மாற்றும் நிகழ்ச்சிகள், உடுமலை மாரியம்மன் கோவில் முன் நடந்தது.கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிரதான கோவில்களில், வெள்ளி மற்றும் சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை எனவும், சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கும் என, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு
 ஆவணி மாத முதல் முகூர்த்தம் 'களை' கட்டிய கடை வீதிகள்

உடுமலை:கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதியில்லாததால், உப்புக்கூடை மாற்றும் நிகழ்ச்சிகள், உடுமலை மாரியம்மன் கோவில் முன் நடந்தது.கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிரதான கோவில்களில், வெள்ளி மற்றும் சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை எனவும், சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கும் என, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.இந்நிலையில், ஆவணி மாத முதல் முகூர்த்த தினமான நேற்று, கோவில்கள் மற்றும் நகை கடைகள், ஜவுளிக்கடைகள் 'களை' கட்டியது. வழக்கமாக, முகூர்த்த நாட்களில், திருமணம் நிச்சயிக்கப்படும் மண மக்கள் வீட்டார், உப்புக்கூடை மாற்றும் உப்பு சீர் நிகழ்ச்சிகள், உடுமலை மாரியம்மன் கோவிலில் அதிகளவு நடக்கும்.முகூர்த்த நாளான நேற்று, கோவிலுக்குள் அனுமதிக்காததால்,கோவில் கோபுரம் முன் நின்று, பல்வேறு உப்புக்கூடை மாற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், நகை கடை வீதி மற்றும் ஜவுளி கடைகளிலும், முகூர்த்த ஜவுளி எடுக்க, நகை எடுக்க என மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கோவில்களுக்கு வெளியில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததால், பூ, பழம் விற்பனை கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X