பொது செய்தி

தமிழ்நாடு

ஓணம் பண்டிகை வந்தல்லோ: கேரள மக்கள் கொண்டாட்டம்!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் வாழும், கேரள மக்கள், ஓணம் பண்டிகையை கொண்டாட தயராகி வருகின்றனர்.பொள்ளாச்சி வாழ், கேரள மக்கள், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டு, கடந்த ஒரு வாரமாக வீடுகள் முன், பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இன்று, ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அதிகளவில், பல வண்ணங்களில் மலர்கள் வாங்கியுள்ளனர்.
 ஓணம் பண்டிகை வந்தல்லோ: கேரள மக்கள் கொண்டாட்டம்!

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் வாழும், கேரள மக்கள், ஓணம் பண்டிகையை கொண்டாட தயராகி வருகின்றனர்.பொள்ளாச்சி வாழ், கேரள மக்கள், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டு, கடந்த ஒரு வாரமாக வீடுகள் முன், பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இன்று, ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அதிகளவில், பல வண்ணங்களில் மலர்கள் வாங்கியுள்ளனர். தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் திரண்டனர்.பூ மார்க்கெட்டில், நேற்று பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. பூக்கள் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கூட்டமாக சேர்த்து அத்தப்பூ கோலமிடாமல், அவரவர் வீடுகளில் கோலமிட்டு கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஓணம், முகூர்த்த நாட்கள் என்பதால் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ, 800 - 1,300 ரூபாய்; முல்லை, 400 - 500 ரூபாய்; சம்பங்கி, 160 - 200; ஜாதிமுல்லை- 400; செண்டு மல்லி, 80 - 100; வாடாமல்லி - 200; அரளி - 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X