10 ஏக்கரில் ரயில்வே: ஜல்லி இருப்புத்தளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10 ஏக்கரில் ரயில்வே: ஜல்லி இருப்புத்தளம்

Added : ஆக 21, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தெற்கு ரயில்வே சார்பில், 10 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கற்கள் இருப்புத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில், பொள்ளாச்சி ரயில்வே இயங்குகிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 600 மீட்டர் தொலைவில், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தையொட்டி, ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான காலி இடத்தை சீரமைத்து, 10

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தெற்கு ரயில்வே சார்பில், 10 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கற்கள் இருப்புத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில், பொள்ளாச்சி ரயில்வே இயங்குகிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 600 மீட்டர் தொலைவில், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தையொட்டி, ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான காலி இடத்தை சீரமைத்து, 10 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக் கற்கள் இருப்புத்தளம் (பேலட் யார்டு) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், ஜல்லிக்கற்கள் கொட்டி வைக்க, வசதி செய்யப்பட்டுள்ளது.இருப்பு வைக்கப்படும் ஜல்லிக்கற்கள், சிறப்பு பெட்டிகள் இணைத்த ரயில்களில் ஏற்ற, 'லுாப் லைன்' வசதியும் செய்யப்பட்டுள்ளது.ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லும் சிறப்பு ரயிலை லுாப் லைனில் நிறுத்தி, புல்டோசர் கொண்டு பெட்டிகளில் நிரப்பி, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தண்டவாள மேம்பாட்டு பணிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், இந்த தளம் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட, மங்களூரு முதல், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வரையிலான, அனைத்து பகுதிகளுக்கும் ஜல்லி கொண்டு செல்லப்படுகிறது. விரைவில், தெற்கு ரயில்வே பகுதிகள் முழுவதுக்கும் இங்கிருந்து ஜல்லி வினியோகம் செய்யப்படும், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X