பொது செய்தி

தமிழ்நாடு

கூலி உயர்வு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வால்பாறை:தமிழக அரசின், கூலி உயர்வு அறிவிப்பால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி, தேனி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில், தேயிலை, காபி எஸ்டேட்களில், 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சு வார்த்தை நடக்கிறது. கடந்த ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள

வால்பாறை:தமிழக அரசின், கூலி உயர்வு அறிவிப்பால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி, தேனி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில், தேயிலை, காபி எஸ்டேட்களில், 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சு வார்த்தை நடக்கிறது. கடந்த ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள ஒப்பந்தம் நிறைவடைந்தது. தினக்கூலியாக, 346.65 ரூபாய் வழங்கப்படும் நிலையில், 400 ரூபாய்க்கும் அதிகமாக வழங்க வேண்டும் என்று, கோவையில் நடந்த பேச்சு வார்த்தையில் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 425.50 வழங்க வேண்டும், என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் உத்தரவால், தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'அட்டைப்பூச்சியின் கடியிலும், கொடிய வனவிலங்குகளின் அச்சுறுத்துதலிலும், உயிரை பணயம் வைத்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம்.தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து, தமிழக அரசு தினக்கூலியாக, 425.50 வழங்க உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X