மீனவர் நலனுக்கு ரூ.20 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கியது: முருகன் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர் நலனுக்கு ரூ.20 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கியது: முருகன் தகவல்

Added : ஆக 21, 2021
Share
திருநெல்வேலி:-மீனவர் நலன் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.திருநெல்வேலி எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழா நடந்தது. மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தனர்.முருகன் கூறுகையில் தமிழகத்தில் பா.ஜ., வளரவே வளராது என்றார்கள். தற்போது நான்கு

திருநெல்வேலி:-மீனவர் நலன் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
திருநெல்வேலி எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழா நடந்தது. மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தனர்.

முருகன் கூறுகையில் தமிழகத்தில் பா.ஜ., வளரவே வளராது என்றார்கள். தற்போது நான்கு எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சி பணியினை சிறப்பாக செய்கிறார்கள். மத்திய அரசின் மீன் வள மசோதாவின் முக்கியத்துவங்களை மக்களுக்கு எடுத்துகூறுவோம். உள்நாட்டு மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

தமிழக அரசின் மீன்பிடி சட்டத்தில் அனுமதி இல்லாமல் மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்கள் பறிமுதல் செய்வதோடு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் மீன்வள மசோதாவில் லைசென்ஸ் இல்லாமல் சென்றால் 1000 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்வள மசோதா குறித்து பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன.

12 முதல் 200 கடல் மைல் தொலைவிலுள்ள இடத்தில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகுகளின் விசைத்திறன் அதிகரிக்கப்பட்டு அப்பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்யப்படும். மத்திய அரசு மீனவர் நலன் திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களின் கருத்துக்களை கேட்டபிறகே நிறைவேற்றப்படும் என்றார்.

பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கூறுகையில், அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும். எத்தனை மாநகராட்சி, உள்ளாட்சி இடங்கள் பெறுவது என்பது குறித்து பிறகு பேசுவோம். தி.மு.க.,வின் 100 நாள் ஆட்சி கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, அதைவிட அதிக காரமாக உள்ளது.

மத்திய அரசுடன் இணைந்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டுவந்து உள்ளதை பாராட்டவேண்டும். அது இனிப்பு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது கசப்பாகும். பா.ஜ., தொண்டர்களை கைது செய்வது காரம். கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திருநெல்வேலி ம.தி.தா.,ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பாரதியார், சிதம்பரனார் பயின்ற வகுப்பறையில் அமர்ந்தனர். அவர்களின் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250 நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X