தாதுமணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாதுமணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்

Added : ஆக 21, 2021
Share
துாத்துக்குடி:துாத்துக்குடி தனியார் ஆலைக்கு தாதுமணல் ஏற்றிச்சென்ற லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை மணலில் இருந்து பல்வேறு தாதுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பல்வேறு மினரல்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால், தாதுமணலை கோடவுனில் வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தடை

துாத்துக்குடி:துாத்துக்குடி தனியார் ஆலைக்கு தாதுமணல் ஏற்றிச்சென்ற லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை மணலில் இருந்து பல்வேறு தாதுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பல்வேறு மினரல்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால், தாதுமணலை கோடவுனில் வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தடை விதித்து தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு 5 லாரிகளில் தாதுமணல் கொண்டு சென்றனர். தகவல் அறிந்த சிப்காட் போலீசார், கனிமவளத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோரும் விசாரித்தனர். ஏற்கனவே அரசு அதிகாரிகள் சீல் வைத்த ஒரு கோடவுனில் இருந்து தாதுமணலை கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X