பொது செய்தி

தமிழ்நாடு

நேதாஜிக்காக ஹிட்லர் பெர்லினில் வெளியிட்ட அரிய ஸ்டாம்ப்கள்: காணக்கிடைக்காத கலைப்பொக்கிஷங்களை சேகரிக்கும் இளைஞர்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மதுரை:நேதாஜிக்காக ஹிட்லர் பெர்லினில் வெளியிட்ட அரிய ஸ்டாம்ப்கள், இந்திய தேசிய ராணுவப்படையினரின் கலைப்பொக்கிஷங்களை சேகரித்து வைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த நாணயவியலாளர் கணேஷ்குமார்.பழம்பொருட்களை சேகரிப்பதை பெருமையாக கருதும் கணேஷ்குமார் கூறியதாவது:நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ல் பெர்லினுக்கு சென்று ஹிட்லரை சந்தித்து தனது இந்திய தேசிய ராணுவப்படைக்கு நிதி
 நேதாஜிக்காக ஹிட்லர் பெர்லினில் வெளியிட்ட அரிய ஸ்டாம்ப்கள்: காணக்கிடைக்காத கலைப்பொக்கிஷங்களை சேகரிக்கும் இளைஞர்

மதுரை:நேதாஜிக்காக ஹிட்லர் பெர்லினில் வெளியிட்ட அரிய ஸ்டாம்ப்கள், இந்திய தேசிய ராணுவப்படையினரின் கலைப்பொக்கிஷங்களை சேகரித்து வைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த நாணயவியலாளர் கணேஷ்குமார்.

பழம்பொருட்களை சேகரிப்பதை பெருமையாக கருதும் கணேஷ்குமார் கூறியதாவது:நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ல் பெர்லினுக்கு சென்று ஹிட்லரை சந்தித்து தனது இந்திய தேசிய ராணுவப்படைக்கு நிதி திரட்ட சென்றார். ஹிட்லர் நிதியுதவிக்கு பதிலாக பெர்லினில் உள்ள ரெய்ஸ்ட்ரெக்ரெய் எனும் பிரிண்டிங் பிரஸ் மூலம் அரியவகை 21 ஸ்டாம்ப்களை அங்கிருந்து நேதாஜிக்காக வெளியிட்டார். அவை அரையணா, ஓராணா, ரெண்டணா, மூன்றணா, எட்டணா, 12 அணா மற்றும் ஒரு ரூபாய் மதிப்பிலான ஸ்டாம்ப்கள். பாதி ஸ்டாம்ப்களில் வளைவுகளுடன் கூடிய டிசைனும் பாதி ஸ்டாம்ப்கள் வளைவின்றியும் உள்ளன.

அதில் புலி பாய்வது போல ஆரஞ்ச், பச்சை, வெள்ளை நிறத்தில் கொடி, வீரர்கள் தேசிய கொடி சுமந்து செல்வது போல, இந்தியாவின் வரைபடம், பீரங்கி, கதர் ராட்டினம் சுற்றும் பெண், வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸ் போன்ற உருவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்ற போது இந்த ஸ்டாம்புகளை நேதாஜியின் நினைவாக வாங்கி வந்தேன்.நேதாஜியின் படை வீரர்கள் பயன்படுத்திய பேட்ஜ், நேதாஜி உருவம் பொறித்த சட்டை பட்டன்கள், டெலஸ்கோப், ராணுவ உயரதிகாரிகள் பயன்படுத்திய மை தொட்டு எழுதும் பேனா, நேதாஜி வெளியிட்ட ஆசாத் ஹிந்து நாணயம், ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சேகரித்து வைத்துள்ளேன்.

ராணுவ வீரர்களுக்காக வெளிவரும் இதழின் சந்தா வசூல் கடிதம், நன்கொடை ரசீது, நேதாஜியைப் பற்றி பல்வேறு எழுத்தாளர்கள் அவரது காலத்தில் எழுதிய அரிய புத்தகங்கள், நேதாஜி ஜப்பான் ராணுவ தளபதி கமாண்டர் லெஜினுடன் இருக்கும் போட்டோ புத்தகங்களில் உள்ளன. 'சுபாஷ் சந்திர போஸ்' என அவர் கையெழுத்திட்ட பிரதியும் உள்ளது.நேதாஜி மட்டுமின்றி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்கள், அதற்கான இசைக்குறிப்பேடு, பீத்தோவன் இசைக்குறியீடு புத்தகங்கள், மகாத்மா காந்தியின் ஹரிஜன் ஆங்கில இதழ், தமிழில் வெளிவந்த சுதேச மித்திரன் வார இதழ் பதிப்பு உட்பட காலத்தில் அழியாத பல்வேறு கலைப் படைப்புகளை சேகரித்து வைத்துள்ளேன்.

நேதாஜிக்கென்று மியூசியம் இல்லை. மதுரையில் மியூசியம் அமைத்து அவரது பல்வேறு கலைப் பொருட்களை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.இவரிடம் பேச94434 75132.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X