பொது செய்தி

தமிழ்நாடு

'ஆக.,31க்குள் குறைந்தபட்ச ஆதாரவிலை வேண்டும்': இல்லாவிட்டால் செப்.,8ல் நாடு தழுவிய போராட்டம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மதுரை:ஆக.,31க்குள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு நிர்ணயிக்காவிட்டால் செப்., 8 ல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என பாரதிய கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:மத்திய அரசு 23 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் 10 சதவீதம் விவசாயிகள் தான் பயன்பெறுகின்றனர். ஏனென்றால் கொள்முதல்

மதுரை:ஆக.,31க்குள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு நிர்ணயிக்காவிட்டால் செப்., 8 ல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என பாரதிய கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:மத்திய அரசு 23 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் 10 சதவீதம் விவசாயிகள் தான் பயன்பெறுகின்றனர். ஏனென்றால் கொள்முதல் மையங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. அந்தந்த சீசனுக்கு ஏற்ப திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வியாபாரிகளிடம் தான் மறுபடியும் விற்க நேரிடுகிறது.

மையங்கள் திறந்திருந்தாலும் சாக்கு இல்லை பணமில்லை என திருப்பி அனுப்புகின்றனர். தற்போது கொள்முதல் மையங்கள் இங்கு மூடப்பட்டுள்ளன. இனி அக்டோபரில் தான் திறப்பார்கள். அதுவரை வியாபாரிகளின் தயவையே நாட வேண்டும். எனவே கொள்முதல் மையங்களை அரசே நிரந்தரமாக நிர்வகிக்க வேண்டும். அதற்கு ஏஜன்சியோ தனிநபர்களோ தேவையில்லை.

குறைந்தபட்ச ஆதாரவிலையை ஆண்டுதோறும் மாறும் பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். இந்தாண்டு அரசு நெல்லுக்கு 7 சதவீத விலை அதிகரித்துள்ளது. ஆனால் உரம், இடுபொருள், கூலிசெலவுக்கு 36 சதவீதம் செலவு செய்துள்ளோம். இந்த கூடுதல் விலை கட்டுபடியாகவில்லை. அரசு அறிவித்துள்ள விலைக்கு குறைவாக வியாபாரிகள் வெளியில் விற்பனை செய்வதை அனுமதிக்கக்கூடாது.

இதை ஆக., 31க்குள் மத்திய அரசு நிறைவேற்றவேண்டும். இல்லாவிட்டால் முதன்முறையாக பாரதிய கிசான் சங்கம் சார்பில் நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தை செப்., 8 ல் நடத்த உள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X