பொது செய்தி

தமிழ்நாடு

கூண்டில் சிக்கிய கரடி: வனப்பகுதியில் விடுவிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி, குந்தா வனப்பகுதியில், இரவோடு, இரவாக விடுவிக்கப்பட்டது.கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த, இரு நாட்களுக்கு முன்பு, கோத்தகிரி வளம் மீட்பு பூங்கா பகுதியில், குப்பைகளை கிளறிய கரடி மக்களை துரத்தியது. அச்சமடைந்த மக்கள் ஓட்டம்

கோத்தகிரி:கோத்தகிரியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி, குந்தா வனப்பகுதியில், இரவோடு, இரவாக விடுவிக்கப்பட்டது.கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த, இரு நாட்களுக்கு முன்பு, கோத்தகிரி வளம் மீட்பு பூங்கா பகுதியில், குப்பைகளை கிளறிய கரடி மக்களை துரத்தியது. அச்சமடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். இரு நாட்களுக்கு பிறகு, குறிப்பிட்ட பகுதியில் வனத்துறையினர், கூண்டு வைத்து, கண்காணித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில், கரடி கூண்டில் சிக்கியது. தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, கூண்டில் சிக்கிய கரடியை, இரவோடு இரவாக, குந்தா வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X