விளைச்சல் குறைவால் வெற்றிலைக்கு தட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளைச்சல் குறைவால் வெற்றிலைக்கு தட்டுப்பாடு

Added : ஆக 21, 2021
Share
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வெற்றிலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விளைச்சல் குறைவால் கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ளது.தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம், வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதியில் பல ஏக்கரில் வெற்றிலை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் நாட்டு ரக வெற்றிலை தேனி மாவட்டம் மட்டுமின்றி, விருதுநகர், கோவில்பட்டி, புதுச்சேரி பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வெற்றிலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விளைச்சல் குறைவால் கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம், வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதியில் பல ஏக்கரில் வெற்றிலை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் நாட்டு ரக வெற்றிலை தேனி மாவட்டம் மட்டுமின்றி, விருதுநகர், கோவில்பட்டி, புதுச்சேரி பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக வரத்து குறைந்ததால், முகூர்த்த நாளான நேற்று ஆண்டிபட்டியில் வெற்றிலைக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. விலை கொடுத்தும் சுப நிகழ்ச்சிகளுக்கு வெற்றிலை கிடைக்காமல் தவித்தனர்.வியாபாரி கூறியதாவது:

சில வாரமாக நிலவிய குளிர்ச்சியான சீதோஷ்ணம் வெற்றிலை வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை.கொடிகளில் சுருட்டை நோய் தாக்கத்தால் விளைச்சல் குறைந்து விட்டது. சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.130 வரை இருந்த வெற்றிலை நேற்று கிலோ ரூ.200 வரை உயர்ந்தது. எனினும் வெற்றிலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த காலங்கள் என்பதால் வெற்றிலைக்கு இன்னும் கிராக்கி ஏற்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X