பொது செய்தி

தமிழ்நாடு

தென்கரை பேரூராட்சி குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நிதி ரூ.10 கோடியில் மறு மதிப்பீடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தேனி: தென்கரை பேரூராட்சி புதிய குடிநீர் திட்டத்தை ரூ.10கோடியில் மறு சீரமைப்பு செய்து செயல்படுத்த வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது. பெரியகுளம், தென்கரை பேரூராட்சியில் 30 ஆயிரம் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு வராகநதியில் கிணறு மூலம் பெறும் குடிநீருடன், ஆழ்துளை குழாய் நீரையும் கலந்து வழங்குவதால் குடிநீருக்கு உகந்ததாக இல்லை. பலரும் பெரியகுளம் சென்று குடங்களில் பிடித்து

தேனி: தென்கரை பேரூராட்சி புதிய குடிநீர் திட்டத்தை ரூ.10கோடியில் மறு சீரமைப்பு செய்து செயல்படுத்த வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பெரியகுளம், தென்கரை பேரூராட்சியில் 30 ஆயிரம் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு வராகநதியில் கிணறு மூலம் பெறும் குடிநீருடன், ஆழ்துளை குழாய் நீரையும் கலந்து வழங்குவதால் குடிநீருக்கு உகந்ததாக இல்லை. பலரும் பெரியகுளம் சென்று குடங்களில் பிடித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் ரூ.9.57 கோடியில் சோத்துப்பாறை அலங்காமடையில் 5 கிணறுகள் அமைத்து அதில் பெறும் நீரை சுத்திகரித்து வழங்க புதிய திட்டம் துவக்கப்பட்டது.

புதிய திட்டத்திலும், பழைய முறையில் வழங்கும் குடிநீரே கிடைக்கும் என கூறி திட்டத்தை ரத்து செய்ய அனைத்து சமூக கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். பேரூராட்சியின் முதல்வார்டில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து நீரை பெற்று சுத்திகரித்து வழங்க கோரினர். எதிர்ப்பால் புதிய திட்ட பணிகள் முடங்கியது.மக்கள் விரும்பும் வகையில் திட்டம் மறுசீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்து ரூ. 10 கோடியில் கூடுதல் மதிப்பீடு தயார் செய்துள்ளனர்.

இதில் அணை பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி குடிநீர் வழங்க ஆலோசனை வழங்கியது. புதிய திட்டத்திற்கு எம்.எல்.ஏ. சரவணக்குமார், கூடுதல் நிதியை அரசிடம் பெற்று தர கூட்டமைப்பினர் மனு வழங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X