பொது செய்தி

தமிழ்நாடு

  தேனியை குப்பை இல்லாத நகரமாக்க முயற்சி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தேனி: தேனியில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தி குப்பையில்லாத நகரமாக மாற்றும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இனி தெருவில் குப்பை வீசினால் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 30 ஆயிரம் குடிருப்புகள் உள்ளன. நகரில் நாள் ஒன்றுக்கு 35 டன் குப்பை சேகரமாகிறது. இது முறையாக கையாளப்படாததால்

தேனி: தேனியில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தி குப்பையில்லாத நகரமாக மாற்றும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

இனி தெருவில் குப்பை வீசினால் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 30 ஆயிரம் குடிருப்புகள் உள்ளன. நகரில் நாள் ஒன்றுக்கு 35 டன் குப்பை சேகரமாகிறது.

இது முறையாக கையாளப்படாததால் பல இடங்களில் சுகாதார கேடு நிலவுகிறது. எனவே மக்கும், மக்காதவை என தரம்பிரித்து 20 டன் மக்கும் குப்பையை உரமாக்க 4 இடங்களில் மைக்ரோ கம்ப்போஸ்ட் செயல்படுகிறது. நகரில் 40 இடங்களில் டம்பர் பிளேசர் எனும் குப்பை தொட்டி வைத்து சேகரித்தனர்.

சுகாதாரப்பணியில் 200 ஒப்பந்த பணியாளர்கள், 88 நிரந்தர பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 2 லாரிகள், 45 பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குப்பை சேகரிப்பில் ஈடுபடும் வாகனங்களுக்கு மாதம் ரூ.8 லட்சம் எரிபொருள் செலவு ஆகிறது. இவ்வளவு செலவு செய்தும் துாய்மை நகரம் உருவாக்க முடியவில்லை.13டன் மக்காத குப்பை தற்போது புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சுப்பையா ,தேனியை குப்பையில்லா நகரமாக மாற்றும் நடவடிக்கை துவக்கியுள்ளார்.

இதற்காக நகரில் 40 இடங்களில் இருந்த குப்பை தொட்டிகளை அகற்றி அங்கு வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியை விரைவுபடுத்தியுள்ளார். 13 டன் மக்காத குப்பை 4 இடங்களில்'ரிசோர்ஸ் ரெக்கவரி சென்டர்' ஏற்படுத்தி பிளாஸ்டிக், இரும்பு, துணி போன்றவற்றை தரம் பிரிக்கவும், இவற்றை எரிபொருளாக சிமென்ட் ஆலைக்கு அனுப்பவும் வசதி செய்ய்ப்படுகிறது. ஒத்துழையுங்கள்கமிஷனர் கூறுகையில், '' தேனியை குப்பையில்லா நகரமாக்கும் நடவடிக்கையால் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதனால் சில நாட்கள் ரோட்டில் குப்பையாக காட்சியளிக்கலாம். இவற்றை போர்க்கால அடிப்படையில் அகற்ற 2 டிராக்டர்கள் முழுவீச்சில் செயல்படுகிறது. மக்கள் குப்பையை வீதியில் வீசி எறிய வேண்டாம். வீடுதேடி வரும் பணியாளரிடம் வழங்குங்கள். நகரை துாய்மை படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதை மீறி குப்பை ரோட்டில் வீசினால் அபராதம் வசூலிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X