இந்தியா

அறிமுகம்: உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக 'நோட்டா'புதுச்சேரி அரசியல் கட்சியினர் கலக்கம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரியில் நடக்க உள்ளாட்சி தேர்தலில் 'நோட்டா' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. கடந்த காலங்களில் ஓட்டு சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த முறை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவைப்படும் 5,000 மின்னணு
 அறிமுகம்: உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக 'நோட்டா'புதுச்சேரி அரசியல் கட்சியினர் கலக்கம்

புதுச்சேரி,-புதுச்சேரியில் நடக்க உள்ளாட்சி தேர்தலில் 'நோட்டா' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. கடந்த காலங்களில் ஓட்டு சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த முறை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவைப்படும் 5,000 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

எத்தனை ஓட்டுமாநிலத்தில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 5 நகராட்சிகளும், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், பாகூர், வில்லியனூர், கோட்டுச்சேரி, மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும், 109 கிராமப் பஞ்சாயத்துகளும் அமைந்துள்ளன. நகராட்சிகளை பொருத்தவரை சேர்மன், வார்டு கவுன்சிலர் என இரண்டு ஓட்டுகளை நேரிடையாக போட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கொம்யூன், கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராமப் பஞ்சாயத்து தலைவர், கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினர் என மூன்று ஓட்டுகளை ஒவ்வொரு வாக்காளரும் பதிவு செய்ய வேண்டி இருக்கும்.அதிகரித்தால்....சட்டசபை தேர்தலில் ஒரு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயரை பயன்படுத்த முடியும். இதற்கு மேலான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டால், மற்றொரு ஓட்டுப் பதிவு இயந்திரம் கூடுதலாக கண்ட்ரோல் யூனிட்டுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை அதிகபட்சமாக 15 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பேலட் யூனிட்டில் இடம் பெற முடியும்.

எனவே, போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இரண்டாவது பேலட் இயந்திரம் கண்ட்ரோல் யூனிட்டுடன் இணைக்கப்படும்.குறைந்தால்...நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளில் குறைவான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும்போது, ஒரே மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் இரண்டு பதவிகளுக்கான ஓட்டுகளை பதிவு செய்ய முடியும். உதாரணமாக, நகராட்சி தேர்தலில் ஒரு வார்டில் 15க்கும் குறைவான வேட்பாளர்கள் போட்டியிட்டால், சேர்மன், வார்டு கவுன்சிலருக்கான ஓட்டுகளை ஒரே மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய முடியும். இருப்பினும், ஓட்டுபோடும்போது மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் உள்ளாட்சி தேர்தலில் குறைவான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிறது நோட்டாஅரசு, அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால், ஓட்டளிக்க பலர் விரும்புவதில்லை. இருப்பினும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இத்தகைய வாக்காளர்களுக்காக உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நோட்டா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இதனால், அரசியல் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். வி.வி., பாட் உண்டா?சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக வி.வி., பாட் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. விருப்ப தேர்வு என்பதால், நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் வி.வி., பாட் பயன்படுத்தப்படாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X