பொது செய்தி

இந்தியா

சுற்றுலா பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்: அ.தி.மு.க., செயலாளர் எச்சரிக்கை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் சுற்றுலா ஊக்குவிப்பு என்ற பெயரில் கொரோனாவை விலை கொடுத்து வாங்கி மக்கள் மீது திணித்துக் கொண்டிருப்பதாக, கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த மாதம் புதுச்சேரியில் 100க்கும் குறைவாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. தற்போது தினசரி 130க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொற்று

புதுச்சேரி-புதுச்சேரியில் சுற்றுலா ஊக்குவிப்பு என்ற பெயரில் கொரோனாவை விலை கொடுத்து வாங்கி மக்கள் மீது திணித்துக் கொண்டிருப்பதாக, கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த மாதம் புதுச்சேரியில் 100க்கும் குறைவாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. தற்போது தினசரி 130க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொற்று அதிகரிப்பதற்கான காரணம், சுகாதாரத்துறை செயலர் மற்றும் கலெக்டருக்கு தெரிந்தும், நமக்கேன் வீண் வேலை என உள்ளனர்.கொரோனா தொற்றை தடுக்க பக்கத்து மாநிலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆனால், புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை வெண்சாமரம் வீசி வரவேற்றுக் கொண்டுள்ளோம். வார இறுதி நாட்களில் எவ்வித கட்டுப்பாடின்றி வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கும்பல் கும்பலாக உலா வருகின்றனர்.சுற்றுலாவை ஊக்குவித்தல் என்ற பெயரில் கொரோனாவை விலை கொடுத்து வாங்கி மக்களின் மீது திணித்துக் கொண்டிருக்கிறோம். முதல்வர் உடனடியாக உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, ஓரிரு மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X