பொது செய்தி

தமிழ்நாடு

அத்தப்பூ கோலமிட்டு போலீஸ்காரரை அனுப்பி வைத்த மருத்துவமனை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மூணாறு: கேரளா ஆலுவாவில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிகிச்சை பெற்ற போலீஸ்காரரை அத்தப்பூ கோலமிட்டு வழி அனுப்பி வைத்தனர்.மூணாறு அருகே மறையூர் போலீஸ் ஸ்டேஷனில் தொடுபுழாவைச் சேர்ந்த அஜிஸ்பால் 36, போலீஸ்காரராக உள்ளார். அவர், இன்ஸ்பெக்டர் ரதீஷ் உட்பட போலீசார் மே 31ல் ரோந்து சென்றபோது கோவில்கடவைச் சேர்ந்த சுலைமான் 26, முகக்கவசம் அணியாமல்

மூணாறு: கேரளா ஆலுவாவில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிகிச்சை பெற்ற போலீஸ்காரரை அத்தப்பூ கோலமிட்டு வழி அனுப்பி வைத்தனர்.

மூணாறு அருகே மறையூர் போலீஸ் ஸ்டேஷனில் தொடுபுழாவைச் சேர்ந்த அஜிஸ்பால் 36, போலீஸ்காரராக உள்ளார். அவர், இன்ஸ்பெக்டர் ரதீஷ் உட்பட போலீசார் மே 31ல் ரோந்து சென்றபோது கோவில்கடவைச் சேர்ந்த சுலைமான் 26, முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தார்.
அதனைகேட்டபோது சுலைமான் போலீஸ்காரர்களை கல்லால் பலமாக தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மற்றும் அஜிஸ்பால் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்கு பின் ஓரிரு நாட்களில் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்த அஜிஸ்பால் ஆலுவாவில் தனியார் மருத்துவமனையில் சுய நினைவு இன்றி சிகிச்சை பெற்றார்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உடல் நலம் தேறியவர் 24 நாட்களுக்கு பின்வீடு திரும்பினார். இருப்பினும் அவருக்கு இரண்டாம் முறை அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால் மீண்டும் சேர்க்கப்பட்டார். அதனை முடித்து இரு தினங்களுக்கு முன் வீடு திரும்பியவரை ஓணத்தை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டு மருத்துவமனை நிர்வாகத்தினர் வழி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X