பொது செய்தி

இந்தியா

ராஜிவ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜிவ் சிலைக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, சர்வமத பிரார்த்தனை நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்

புதுச்சேரி-புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜிவ் சிலைக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, சர்வமத பிரார்த்தனை நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.காங்கிரஸ்காங்., கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், ஐ.என்.டி.யூ.சி., மாநிலத் தலைவர் பாலாஜி, செயலாளர் சூசைராஜ், நிர்வாகிகள் திருமுருகன், கணேசன், வீரமுத்து உள்ளிட்டோர் ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்தனர்.முன்னதாக, காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ராஜிவ் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X