கத்தியால் குத்தி தொழிலாளி கொலை: வில்லியனூர் அருகே பரபரப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வில்லியனுார்,-புதுச்சேரி அருகே, தொழிலாளியை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த சம்மட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் கண்ணன், 35; வெல்டர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் எடுத்து வெல்டிங் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகள்

வில்லியனுார்,-புதுச்சேரி அருகே, தொழிலாளியை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த சம்மட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் கண்ணன், 35; வெல்டர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் எடுத்து வெல்டிங் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகள் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்தவர், சம்மட்டிகுப்பத்தை சேர்ந்த காதலி பிரபாவதியை, பெற்றோர் எதிர்பை மீறி திருமணம் செய்துகொண்டு தொண்டமாநத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், தொண்டமாநத்தம் மாங்குளம் வீதியை சேர்ந்த காத்தவராயன் மகன் பார்த்தசாரதிக்கு அரசு கொடுத்த இலவச மனையில் இருந்த சிறிய வீட்டை ரூ.6 லட்சத்திற்கு விலை பேசி கண்ணன் வாங்கினார். சில லட்ச ரூபாயை செலவு செய்து, வீட்டை புதுப்பித்து கடந்தாண்டு குடியேறினார். இதற்கிடையில், விற்பனை செய்த வீட்டை திரும்ப கொடுக்குமாறு பார்த்தசாரதி கடந்த சில மாதங்களாக கண்ணனிடம் வற்புறுத்தி வந்துள்ளார். வீட்டை கொடுக்க மறுத்ததால், ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் பஞ்சாயத்து பேசி பார்த்தும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று மாலை 4:00 மணியளவில், ராமநாதபுரம் ஏரிக்கரை சாலையில் தொண்டமாநத்தம் சாராயக்கடை அருகே கண்ணன் தாயம் விளையாடிக் கொண்டிருப்பதாக பார்த்தசாரதிக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற பார்த்தசாரதி, தனது வீட்டை எழுதி கொடுக்குமாறு கேட்டுள்ளார். வீட்டை கொடுக்க வாய்ப்பில்லை என தெரிவித்ததால் ஆவேசமடைந்த பார்த்தசாரதி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த கண்ணனை, அருகே இருந்தவர்கள் மீட்டு, ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொலை குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற மேற்கு பகுதி எஸ்.பி., ரங்கநாதன், வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட போலீசார், தடயங்களை சேகரித்து, உடலை பிரேத பரிசோதனை செய்தவதற்கு ஜிப்மர் மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன கண்ணனுக்கு, பிரபாவதி என்ற மனைவியும், பிரத்திவரன், 6, கமலேஷ், 4, ஆகிய இரு மகன்களும் உள் ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X