பொது செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை - சென்னைக்கு அரசு பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை,-பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு, அரசு பஸ் மீண்டும் இயக்க, பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை நகரமும் ஒன்று. தனியார் அனல்மின் நிலையம், மாஜிஸ்திரேட் கோர்ட், அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மற்றும் அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளது.

பரங்கிப்பேட்டை,-பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு, அரசு பஸ் மீண்டும் இயக்க, பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை நகரமும் ஒன்று. தனியார் அனல்மின் நிலையம், மாஜிஸ்திரேட் கோர்ட், அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மற்றும் அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால், சிதம்பரம் அல்லது கடலுார் சென்று அங்கிருந்து, செல்லவேண்டியுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையேற்று, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசு பஸ் இயக்க, இயக்கப்பட்டது.பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பயனடைந்தனர். சில ஆண்டுகளிலேயே அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பாதிக்கின்றனர்.எனவே, பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு, மீண்டும் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X